Tuesday, 2 May 2023

வரன் (வரம்) தேவை சகோ நஜீமா பெரோஜ்

 





வரன் (வரம்) தேவை

 

சகோ நஜீமா பெரோஜ் M A (ஆங்கில ஆசிரியை ஓய்வு )

அனுப்பிய பதிவு

 

03052023

 

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த  வரம் 

திருமணம் சொர்க்கத்தில் அமைவது 

திருமணம் ஆயிரம் காலத்துபயிர்

என்று கூறியுள்ளார்கள் 

 

சொந்த ங்கள் பிரிந்து வாழ்கிறார்கள் 

அந்நிய சம்பந்கங்கள் தேடுகிறார்கள் 

 

வாய்ப்பாக நிறைய திருமண தகவல் மையங்கள் இணையாதளங்கள். சாதி வாரி யாக.

 

அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்கப்படுத்துகிறது .

 

பெண்ணுக்கு ஏத்த பிள்ளையை தேடி படாத பாடு படும் 

பெற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் .

 

ஆனால் எத்தனை நிபந்தனைகள் இருபக்கமும். ஒரு வழியாக திருமணம் அமைந்துள்ளது என்றால்  ஈகோ எட்டி பார்க்கிறது விட்டுக்கொடுத்து வாழ்வது மறைந்தே வருகிறது.

 

பொருளாதார ஏற்றத்தாழ்வு தம்பதிகளுக்குள்இடைவெளியை அதிகரிக்குது. 

 

பெற்றோர்கள் தலையீடு அதிகம் அவர்களே சேர்த்து வைத்து அவர்களே பிரிவினைக்ககாரணமாகின்றனர்.

 

மாப்பிள்ளையை வரதட்சணை கொடுத்து விலைக்குவாங்கி அடிமை போல் நடத்துகிறார் கள்.

 

மாமியார் கொடுமை இப்ப இல்லை. தடம் மாறி விட்டது பெண்ணின் அம்மா தான் பிள்ளையின் (மருமகனின்_)சர்வாதிகாரி

 

பிள்ளை பெறுவது கூட அவர்கள்சொல்வது போல தான். முதல் குழந்தை பள்ளிக்கு சென்றபின் அடுத்த குழந்தை பற்றி யோசிக்கனும் ஆணையிடுகிறார்கள்.

 

 ஒரு பிள்ளை பெற்றவள் மலடி என்கிறது ஒரு பழம் பாடல். 

 

சகோதர பாசம் கேள்விக்குறியாகியுள்ளது.

 

 அந்த ஒரு குழந்தையையும் அப்பாவி ன் பாட்டி இடம் ஒட்ட விடுவதில்லை.

 

 என் புருஷனை கெடுத்தமாதிரி என் பிள்ளையையும் கெடுத்து விடாதே என்று மாமியாரை சாடுகிறாள் மருமகள்.

 அவள் அம்மா தான் தூண்டுதல் 

 

ஆம்பிளை பிள்ளை பெற்றவளுக்கு அஞ்சா நாளே தீர்ந்து விட்டது என்று பழமொழி சொல்வார்கள். தன் உரிமைகளை விட்டுக்கொடுத்துவாழ்வது நியதி ஆகிவிட்டது. 

 

இத்தனையும் பயோடேட்டா வில் தெரிகிறதா.  இல்லை. திருமணதகவல் மையங்கள் Disclaimer போட்டு விடுகிறார்கள் 

 

10years itch என்பார்கள் இப்ப 10 days itch 10 month itch .அதனால் மனமுறிவுகள்அதிகம் ஒழக்க சீர்கேடுகள்தலை க்குகின்றன. ++

இரண்டாவது மணமும் இனிப்பதில்லை. பிஞ்சு குழந்தைகள் தந்தை பாசத்தை சொந்த சகோதர பாசத்தை இழக்கிறார்கள். தேவை தேவை என்று பெற்ற திருமணம் ஒரு social status ஆகிறது.

 

விளைவுகளைபற்றி சிந்தனை செய்தால் நல்லது. 

எதிர்காலத்தில் நல்ல சமுதாயம் உருவாகும் 

 

தன் கருத்துக்களைப் பகிர்ந்த சகோ நஜீமா பெரோசுக்கு நன்றி

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

03052023 புதன்

சர்புதீன் பீ

 

No comments:

Post a Comment