திருமறை குர்ஆன் (66:11)
சகோ சிராஜுதீன் அனுப்பியது
12052023
"……என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து ......என்னை பாதுகாத்துக் கொள்! மேலும் அநியாயக்கார சமுதாயத்தை விட்டும் பாதுகாத்துக் கொள் ......."
விடை:
திருமறை குரான் பாகம் 66 (அத்தஹ்ரீம்) வசனம் 11ல் கொடுங்கோலன் ஃபிர் அவ்ன் மனைவி ஆசியா என்பவர் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவதாக உள்ள வசனம்.
விளக்கம்:
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் பாகம் 66 அத்தஹ்ரீம் வசனம் 10 முதல் 12 வரை உள்ள வசனங்களில் நிராகரிக்கும் பெண்கள் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களை பற்றி உதாரணங்கள் கூறுகிறான். அதில் நபிமாருடைய மனைவியாக இருந்தாலும் அவர்கள் நிராகரிப்பவர்கள் ஆக இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து அவர்களை யாரும் தடுத்து கொள்ள முடியாது என்று நூஹ் நபி மற்றும் லூத் நபியின் மனைவிகளை
நிராகரிப்பவர்களுக்கு உதாரணமாக கூறுகின்றான். இரு பெண்களும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ள மறுத்து தங்கள் கணவன்மார்களுக்கு துரோகம் செய்தனர். ஆகையால் அல்லாஹ்வின் வேதனையில் இருந்து அவர்களை யாராலும் தடுக்க முடியவில்லை.
வல்ல அல்லாஹ், தன் திருமறையில் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு உதாரணமாக முதலாவதாக ஃபிர் அவ்ன் மனைவி ஆசியாவையும் மற்றும் இம்ரானுடைய மகள் மரியம் ஆகிய இருவரையும் கூறுகிறான்
மேலும் வல்ல அல்லாஹ் இணை வைப்பவர்களை முற்றிலும் நிராகரிக்கிறான். அந்த வகையில் இப்ராஹீம் நபிகளின் தந்தை ஆசர் என்பவருக்காக கேட்கப்பட்ட துஆக்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவில்லை. அதைப்போலவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வளர்த்த பாட்டனர் அப்துல் முத்தலிப், பெரிய தகப்பனார் அபுதாலிப் ஆகியோருக்கும் ஓர் இறைகொள்கையை ஏற்காததால் நற்பாக்கியம் கிடைக்கவில்லை என்பது வரலாறு.
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
பீர் ராஜா
முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷிரீன பாருக்
ஷர்மதா
கதீப் மமுனா லப்பை
பதிவை அனுப்பிய சகோ
சிராஜுதீனுக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
21ஷவ்வால்(10) 1444
12042023வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment