மூலிகை அறிமுகம்
கட்டிப்போட்டால் குட்டி போடும்
என்று வேடிக்கையாகப் படித்து விளையாட்டாக ஒரு இலையை நூலில் கட்டிதொங்க விட்டு, அது குட்டி
போடுவதை ( முளைப்பதை ) பார்த்து மகிழ்ந்திருக்கிறோம் –
புதகத்தில் வைத்த மயில் இறகு போல் இது
ஏமாற்றுவது இல்லை
(Vegetative
propagation) விதை
இல்லா இனப்பெருக்கத்துக்கு எடுத்துக்காட்டாகப்
படித்திருக்கிறோம்
இப்படி நமக்கு மிகவும் தெரிந்த
ரணகள்ளிச செடியின் இலைகள் மிகப்பல
மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகை என்று அறியும்போது வியப்பு மேலிடுகிறது
Kalanchoe pinnata (ரணகள்ளி) என்ற பெயர் கொண்ட
இந்தச் செடி எளிதாக எங்கும் வளரும்
ஒரு இலையை மண்ணில் ஊன்றி வைத்தாலோ செடியாக வளர்ந்து விடும்
மருத்துவ குணங்கள்
இந்தச் செடியின் இலை மட்டுமே உட்கொள்ளும்
மருந்தாகவும் வெளிப்பூசசாகவும் பயன் படுகிறது
பெயருக்கு ஏற்ப ரணங்களை (காயங்களை ),
வீக்கங்களை குணப்படுத்தவம் உதவுகிறது
சிறு நீரகக் கல் எந்த அளவில் இருந்தாலும் வெளியேற்றி
விடும்
சர்க்கரை நோயைக் கட்டுபடுத்தும்
காது வலி
சேற்றுப்புண் குணமாகும்
மூல நோய், கண் நோய் சரியாகும்
காய்ச்சல், மஞ்சள் காமாலைக்கு சிறந்த
மருந்து
நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தி
உடலில் உள்ள நச்சுக்கள வெளியேற்றி உடல்
எடையைக் குறைக்க உதவும்
எச்சரிக்கை
1 ரண கள்ளியை மருந்தாக உட்கொள்ளும்போது
உணவுக் கட்டுப்பாடு (பத்தியம் ) அவசியம்
பால், அசைவ உணவுகளுக்குத் தடை
2 இலைகளில் உள்ள சாறு அமிலத்
தன்மை கொண்டது
கையில் பட்டால் அரிக்கும் என்கிறார்கள்
3 வழக்கமான
எச்சரிக்கை
இந்தப் பதிவு மருத்துவக் குறிப்பு இல்லை
நமக்கு நன்கு தெரிந்த எளிதில் கிடைக்கும்
செடிகளின் மூலிகை குணங்களை அறிவிக்கவே இந்தப் பதிவு
தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் பயன் படுத்தவும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
23052023 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment