{
தமிழ் (மொழி ) அறிவோம் --பாரதியார் மடல்
26052023
“ஏறு! ஏறு!ஏறு! மேலே! மேலே! மேலே
. உனக்கு சிறகுகள் தோன்றும் பறந்து போ
பற! பற! மேலே! மேலே! மேலே”
உற்சாகமூட்டி ஊக்கம் தரும் இந்த வரிகள் யாருடையவை ?
எதில் வருவது ?
விடை
பாரதியார் புதுச்சேரியில் இருந்து தன் நண்பர் நெல்லைபப்ருக்கு எழுதிய
மடலில் வரும் வரிகள்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி –முதல் சரியான விடை
சிரஜூதீன்
கணேச சுப்பிரமணியம்
சோமசேகர்
செல்வகுமார்
நீண்ட கடிதத்தின் சில வர்களை கீழே தருகிறேன்
நெஞ்சம் இளகி விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது
உள்ளமே உலகம்
தமிழ் நாடு வாழ்க என்றெழுது
ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது
பெண்ணைத் தாழ்மை செய்தோன்கண்ணைக் குத்திக்கொண்டான் என்றெழுது
விளக்கம்
சகோ சிராஜுதீன் தன் விடையில் தெளிவான விளக்கம்
கொடுத்திருக்கிறார்
அதைக் கீழே காணலாம்
இந்த வரிகள்
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சி.க்குத் தொண்டர், சுப்பிரமணிய பாரதிக்குப் புரவலர் என்னும்
பன்முகம் கொண்ட பரலி சு. நெல்லையப்பர் என்பாருக்கு, கடந்த
19 ஜுலை 1915 அன்று மஹாகவி பாரதியார் அவர்கள்
'எனதருமைத்
தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளைக்கு' என்று விளித்து எழுதிய கடிதத்தில் தமிழ், தமிழர்களை பெருமை படுத்தி வரைந்த அழகிய கவிதை ஆகும்
இன்று தேசியகவி பாரதியார் கவிதைகளையும், கட்டுரைகளையும் படித்துப் பயனடைகிறோம் என்றால்
அவ் வாய்வுகளைத் தொடங்கி வைத்த பரலி சு. நெல்லையப்பர்
ஒரு முக்கிய காரணர். பாரதியின் வரலாறு
முதலில் எழுதியவர் பரலி சு. நெல்லையப்பபிள்ளை ஆவார்.
இது 'பத்ம பூஷன்' விருது பெற்ற மரபுக்கவிஞர் பெ தூரன்
அவர்கள் தொகுத்த பாரதி தமிழ் என்ற நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது
இ(க)டைச் செருகல்
பாரதியின் மடலை நான் பார்த்தது பேரனின் 12ஆம் வகுப்பு தமிழ்
பாட நூலில்
(தமிழ் நாட்டில் மட்டும்தான் மாநில அரசு பாடநூல்களை வெளியிடுகிறதாம் )இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௨௭௦௫௨௦௨௩
27052023 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment