Sunday, 21 May 2023

ஒரு மீனின் தரைப்பயணம் சகோ ஷர்மதா அனுப்பியது

 ஒரு மீனின் தரைப்பயணம்

சகோ ஷர்மதா அனுப்பியது
17052023
காலையில் பஜர் தொழுகையை முடித்துவிட்டு வாசல் கூட்டுவதற்காக கதவை திறந்தால் அங்கு ஒரு ஆச்சரியம்
நெகிழித்துண்டை தன் உடலுடன் சேர்த்து ஒரு பெரிய மீன் வாசப்படிக்கு அருகில் கிடந்தது. நம்ம வீட்டின் முன் இந்த மீன் எப்படி வந்தது.யார்இதை இங்கு கொண்டு வந்து போட்டிருப்பார்கள் என்று
பயத்துடனும் வியப்புடனும் நின்றிருந்தேன்.
அப்போது அதைப்பார்த்து விட்டுப் போன பக்கத்து வீட்டுக்காரங்க என்ன பாயம்மா? உங்க வீட்டுக்கிட்ட மீன் வந்து கிடக்கு என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அது உயிருடன் இருப்பதையும் பார்த்திருந்தார்கள்.
என்ன செய்வதென திகைத்து நின்ற பொழுது கொஞ்சம் தள்ளி உள்ள பெண் வந்து பார்த்துவிட்டு இது தேழி மீன்,இதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்றார்.
விரால் மீன் போல்
தோற்றமுடையதாக
இருந்தது.ஆனால் விரால் இல்லை.
நான் எடுத்துக்கொண்டுபோய்
சமைக்கிறேன் என்றவர்
அதை அவ்வளவு எளிதாக கொல்ல முடியாது என்பதால்
கேஸ் அடுப்பில் தண்ணீரை கொதிக்க
வைத்துவிட்டு மீனை எடுத்துச்செல்வதற்காக
பையுடன் வந்தார்.
அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த ஒரு
சிறுவன் இந்த மீன் பக்கத்தில் உள்ள அந்த
மாமாவுடையது என்று
சொன்னான்.
எல்லோருக்கும் திரும்பவும் ஆச்சரியமாக
இருந்தது.
என்ன? அவருடையது
இங்கே எப்படி வந்தது?
எல்லோருடைய எண்ணங்களிலும் இதே கேள்வி எழுந்திருப்பது
ஒவ்வொருவருடைய முகத்திலும் தெரிந்தது.
இப்படி நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மீனைச் சமைப்பதற்காக எடுத்துச்செல்லவிருந்தவர் நான் வேறு கேஸில்
தண்ணீரைக் கொதிக்க
வைத்து காஸை வீணாக்கி விட்டேன் என்றவாறு அலுத்துகொண்டு வீட்டுற்குச்சென்றார்.
அந்தச் சிறுவன் மீனை எடுத்துக்கொண்டு மீனுக்குச் சொந்தக்காரரிடம் கொடுத்துள்ளான்.
அவன் கேட்கிறான், மாமா மீன் நீங்கள்தானே வாங்கி வந்தீர்கள்?
பிறகு எப்படி இதை தெருவில் போக விட்டீர்கள் என்று
கேட்க அவர் வீட்டிலிருந்த தண்ணீர்தொட்டியில் முதல் நாள்போட்டு வைத்திருந்தேன்
என்றார்
அந்த மீன் தொட்டியை விட்டு வெளியில் வந்து இரண்டு வீடுகள் தாண்டி
எங்களுடைய வீடுகளுக்கான பெரிய
கேட்டில் உள்ளே வந்து இரண்டாவதாக உள்ள எங்களுடைய வீட்டின் முன் வந்து கிடந்தது பெரிய
ஆச்சரியமான,
நகைச்சுவையான சம்பவமாவக இருந்தது
என்னுரை
நபி மூசா அவர்கள் சாப்பிட வைத்திருந்த மீன் ஒரு மாறுபட்ட முறையில் தண்ணீருக்குள் சென்றதை நினைவு படுத்துகிறது இந்த நிகழ்வு
குறிப்பு
தேழி(ளி) மீன் நச்சுத்தன்மை உடையது
அதை சாப்பிடுவது பலவகையிலும் உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கும் என்று
இணையத்தில் படித்தேன்
பதிவை அனுப்பிய சகோ
ஷர்மதாவுக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
17052023 புதன்
சர்புதீன் பீ
.
No photo description available.
All reactions:
Khatheeb Mamuna Lebbai

No comments:

Post a Comment