புதுப்பொலிவில்
யோகாவும் இசுலாமும் பகுதி2
யோகக்கலையின் பிரிவுகளான யமம் நியமம் அவற்றின் உட்பிரிவுகள் இவற்றிற்கும் இசுலாமிய நெறிகளுக்கும் உள்ள சில ஒற்றுமைகளைப் பார்ப்போம்
மிகத்தெளிவாக ஒன்றை நான் வலியுறுத்திச்சொல்கிறேன் ஒன்றை உயர்த்தி மற்றதை தாழ்த்துவது என் நோக்கம் அல்ல.
பிறப்பாலும் வளர்ப்பாலும் வாழ்க்கை நெறியாலும் நான் ஒரு இசுலாமியன். எனக்குத்தெரிந்த மட்டில் இசுலாமியக் கோட்பாடுகள் அனைத்தையும் தவறாமல் கடைப்பிடித்து வருபவன்.
பணிஓய்வுவுக்குப் பிறகு யோகாவில் முதுநிலைபட்டம் பெற்றவன்.. அதற்கான ஆய்வுக்கட்டுரைக்கு நான் எடுத்த தலைப்பு இசுலாமும் யோகக்கலையும். அதற்காக வலை தளங்களிலும் நூல்களிலும் தகவல்களைத் தேடியபோது நான் கற்ற சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
முன்பே குறிப்பிட்டது போல் சமூக ஒழுக்கங்கள் பற்றி பேசும் யமம் ஐந்து பிரிவுகளைக்கொண்டது.
அவை அகிம்சை சத்யம் அட்டயா பிரமசசாரியம் அபாரிக்ரகம்
இவற்றிற்கும் இசுலாமுக்கும் உள்ள சில ஒருமைப்படுகளை சுருக்கமாகப் பார்ப்போம்.
அகிம்சை
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றும் . உண்மையில் அமாவாசைக்கும் இசுலாதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு . இசுலாமிய நாள் மாதம் எல்லாம் நிலவின் தோற்றம் மறைவு வளர்பிறை தேய் பிறை இவற்றின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகின்றன. இப்படி அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல் இசுலாத்துக்கும் அகிம்சைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
நீதியின் அடிப்படையில் அன்றி உயிர்களைக் கொல்வதை இசுலாம் அனுமதிக்கவில்லை. தவறாக ஒருவர் கொல்லப்பட்டால் அவரின் வாரிசுகளுக்கு தவறு இழைத்தவரைக் கொல்லவோ அல்லது தகுந்த இழப்பீடு பெறவோ சட்டம் அனுமதிக்கிறது..
ஒரு பூனையை உணவின்றி சில நாட்கள் அடைத்து வைத்திருந்த பெண்ணுக்கு நரகம் கிடைக்கும் என்று நபிகள்(சல்) சபித்திருக்கிறார்கள்..
இசுலாமிய பயங்கரவாதம் என்பதே ஒரு முரண்தொகையாகும். உண்மையான இசுலாமுக்கும் பயங்கர வாதத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. பயங்கரவாதியாக இருப்பவர் உண்மையான முசுலிம் அல்ல
,
சத்தியம் (வாய்மை)
வேடிக்கையாகவோ நகைச்சுவைக்காகவோ பொய் சொல்வதைக்கூட இசுலாம் அனுமதிக்கவில்லை.
“வாய்மையளார்களுக்கு வாய்மைகுறிய பரிசை ஏக இறைவன் வழங்குவான்” என்கிறது புனித குரான்
வணிகப்போருட்களில் உள்ள குறைகளை மறைக்காமல் தெளிவு படுத்தி விற்பவரை இறைவன் ஆசிர்வதிக்கிறான் ;குறைகளை மறைத்து பொய் சொல்லி விற்பவரை இறைவன் சபிக்கிறான் என்பது நபி மொழி.
அட்டாயா (களவு தவிர்த்தல் ) .
களவு என்பதை ஒரு சமுதாயச சீர்கேடாக இசுலாம் பாவிக்கிறது.. .தண்டிக்காமல் விட்டால் பரவி சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு தீய சக்தி களவு. அதனால்தான் களவுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்கள் தவறு செய்யப் பயப்படும் அளவுக்கு கடும் தண்டனையாக deterrent punishment ஒரு அளவுக்கு கையை வெட்டுதல் என்று விதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏழை, பணம் படைத்தவர், வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.
களவில் ஈடுபட்டது என் அருமை மகள் என்றால் கூட அதே தண்டனைதான் என்று நபிகள் நாயகம் (சல்) சொல்லியிருக்கிறார்கள்
பிரமசசாரியா- பால் உணர்சிகளை முறைப்படுத்துதல்
இல்லறத்தின் மாண்பு இசுலாத்தில் மிகவும் வலியுறுத்தப்படுகிறது. துறவறம் எனபது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.. இல்லறம்தான் பால் உணர்வுகளுக்கு ஒரு முறையான வடிகாலாகாவும் வழி காட்டியாகவும் அமையும்.
“கற்பு நெறியில் வாழும்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக இறைவன் பாவ மன்னிப்பையும் மகத்தான வெகுமதிகளையும் வழங்குவான் “ என்கிறது புனித குரான் .
சோரம் போகும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
இயற்கைக்கு மாறான இன்பம் நாடிய ஒரு சமுதாயமே அழிக்கப்பட்டதாகக் குரான் எச்சரிக்கை விடுக்கிறது.
அபாரிக்ரகம்- தான்,, தனது என்ற எண்ணங்களைத் தவிர்த்தல் ; பிறர் பொருளை விரும்பாமை..
சிலருக்கு செல்வம் அதிகமாக வழங்கப்ட்டிருப்பது அவர்கள் வறியவர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதற்காகவே என்பதை இசுலாம் வலியுறுத்துகிறது
.இதன்அடிப்படையில்தான் சக்காத்து என்ற கடமையாக்கப்பட்ட தருமம் விதிக்கப்பட்டுள்ளது ,
தேவைக்கு மேல் ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வம் இருந்தால் சக்காத்து கொடுத்தே நாற்பது ஆண்டுகளுக்குள்ளாக அந்த செல்வம் முழுமையாகக் கரைந்து விடும்..
நல்வழியில் தாரளமாக செலவு செய்பவர்களுக்கு இறைவன் நல்ல வெகுமதியை வழங்குவன் என்கிறது குரான்.
மேலும் இறைவனை நேசிக்கிறவர்கள் தங்கள் சுற்றத்தார்க்கும் அனாதைகளுக்கும் தேவை உள்ளவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கேட்பவர்களுக்கும் நல்ல முறையில் கொடுப்பார்கள் என்கிறது குரான்,.
வட்டியைத் தடை செய்வதன் மூலம் அபாரிகிரகாவை இசுலாம் வலியுறுத்துகிறது
தனி மனிதன் ஒழுக்கம் பற்றிப் பேசும் நியமா பற்றி அடுத்த பகுதியில்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
21052023ஞாயிறு
சர்புதீன் பீ
09052016 அன்று ஒரே பகுதியாக வெளியிட்டதன் முதல் பகுதி
No comments:
Post a Comment