Sunday, 21 May 2023

புதுப்பொலிவில் .ஏறுவாடி

 புதுப்பொலிவில்

.ஏறுவாடி
14052023
ஏறுவாடி என்ற பெயரைக்கேட்டவுடன் தர்கா மனநலம் குன்றியர்வர்களுக்கு ஒதிப்பார்ப்பது தீ விபத்து என்றெல்லாம் கற்பனையைப் பறக்க விட வேண்டம்.
அந்த ஏறுவாடி கீழக்கரை அருகில் கடற்கரையில் உள்ள ஊர்.
வேறு மாநிலத்திலிருந்து ஏறுவாடிக்கு மாற்றலான எங்கள் வங்கி அதிகாரி ஒருவர் கீழக்கரை ஏறுவாடிக்குப் போய் தவறுதலாகப் போய் திரும்பி வந்த நிகழ்வும் உண்டு
இது நெல்லை மாவட்டத்தில் நெல்லையிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அழகிய ஊர்.
மேற்குத் தொடர் மலைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் ஒரு சுகமான தட்ப வெட்ப நிலை.கொஞ்சம் வெயில் அதிகம் அடித்தால் உடனே ஒரு சிறு மழை பெய்து சரி செய்து விடும்.
.ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்தில் சலசலக்கும் நம்பியாறு
கோவையிலிருந்து முது நிலை மேலாளராகப் பதவி உயர்வு பெற்று ஏறுவாடி வந்தேன்
.நிறைய வெளி நாடு வாழ் இந்தியர்கள் வசிக்கும் அமைதியான ஊர்..
அந்தச் சின்ன ஊரில் கிட்டத்தட்ட பத்து பள்ளி வாசல்களும் ஒரு அரபிக் கல்லூரியும் இருக்கின்றன.(அத்தா நெல்லையில் பணி புரிந்த காலத்தில் அரபுக்கல்லூரியில் மீலாது விழாவில் உரையாற்ற வந்தபோது நானும் அத்தாவுடன் வந்ததாக ஒரு மெல்லிய நினைவு)
கிளையில் பொறுப்பு ஏற்குமுன் ஒரு வாரம் திருநெல்வேலியில் தங்கி தினமும் பேருந்தில் போய் வந்தேன்.இடையில் ஒரு நாள் விடுமுறை வந்தது. நாங்கள் முன்பு திருநெல்வேலியில் இருந்தபோது நெல்லை சந்திப்பில் மிகவும் புகழ் பெற்ற ஒரு அசைவ உணவு விடுதியில்.. ரொட்டி குருமா சாப்பிடுவதற்காகவே அக்கம் பக்கம் உள்ள ஊர்களிருந்து நெல்லை வருவார்கள்.
அந்த நினைப்பில் காலைச்சிற்றுண்டி சாப்பிட அந்த விடுதிக்குப் போனேன். மிகவும் பொலிவிழந்து போயிருந்ததையும் பொருட்படுத்தாது உள்ளே போய் அமர்ந்தேன்.
ஒரு நீண்ட பத்து நிமிட இடைவெளிக்குப்பின் என்ன சாப்டிரிங்க என்று ஒரு குரல் கேட்டது. ரொட்டியும் குருமாவும் கொடுங்கள் என்று சொன்னேன்.
மீண்டும் ஒரு பத்து நிமிட இடைவெளிக்குப்பின் இன்னொருவர் வந்து என்ன சாப்டிரிங்க என்றார். ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்று சொன்னவுடன் முதலில் கேட்டவர் அசரீரியாக நான் இல்லை அவரிடம்தான் சொல்லவேண்டும் என்றார் , மறுபடி ரொட்டி குருமா என்று சொன்னேன்.
மீண்டும் ஒரு பத்து நிமிட இடைவெளி.மூன்றாவதாக ஒருவர் வந்து ரொட்டி குருமா கொஞ்சம் பழசாக இருக்கும் பரவாயில்லையா என்று கேட்டார். புதிதாக என்ன இருக்கிறது என்று கேட்டேன்,
முந்தா நாள் மாலை போட்ட சமோசா சுட வைத்து புதிதாக்கித் தருகிறோம் என்றார்.
தப்பித்தேன் பிழைத்தேன் என்று வெளியேறி விட்டேன்,
ஏற்கனவே நான் திருநெல்வேலியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். எனவே ஏறுவாடி கிளையில் தெரிந்த முகங்கள் பல இருந்தன.ஒரு குழுவாக மிகச்சிறப்பாக பணியாற்றியதால் பணிகள் எல்லாம் முடிந்து ஐந்தரை மணிக்கெல்லாம் கிளையைப் பூட்டி விடுவோம்.
கிளையில் பெண்களுகென்று தனியாக ஒரு நுழைவாயில் , தனி அறை இருந்தது. ஆண்கள் வெளி நாடு சென்று விடுவதால் பெண்கள்தான் அதிக அளவில் வங்கிக்கு வருவார்கள்.
Money is what it does என்று ஒரு பொருளாதாரக் கோட்பாடு இருக்கிறது,.அதன் உண்மையான பொருளை நான் உணர்ந்தது ஏறுவாடியில்தான். அங்கிருக்கும்போதுதான் மகள் பாப்டியின் திருமணம நடைபெற்றது.
திருமணம் பற்றி எந்த சிந்தனையும் முன்னேற்பாடும் இல்லாத ஒரு நிலையில் இறைவன் நாட்டப்படி திருமணம் கூடி வந்தது மகிழ்ச்சிதான் .
பொருளாதாரப் பிரச்சனையில்
நண்பர் திரு குப்புசாமி காலத்தின் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிதாய் இன்றும் நினவில் நிற்கிறது .
பணம் கொடுத்தது பெரிய உதவி
நானாகத் திருப்பிக் கொடுக்கும் வரை மறந்தும் கூட அது பற்றிக் கேட்காமல் அமைதி காத்தது அவரின் பெருந்தன்மை
அடுத்து வங்கித் தோழர்கள் திரு நடராஜன் . கிருஷ்ணகுமார் இருவரும் பெரிதும் உதவினர்
சில செய்திகளை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். முதலாவது வங்கி மனது வைத்திருந்தால் எளிதாக என் பிரச்னைக்கு தீர்வு கொடுத்திருக்கலாம்
கடனுடன் கூடிய தொடர் வைப்பு நிதியில் நான் பணம் செலுத்தி வந்தேன். அதற்குரிய கடன் தொகையைக் கொடுக்க வங்கி துணைப் பொது மேலாளர் வன்மையாக மறுத்து விட்டார்.. அதற்கு தகுந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இன உணர்ச்சியா என்ற ஐயம்.
இந்தக்கடன் சம்பந்தமாக பலமுறை நான் நெல்லை மதுரையில் உள்ள உயர் அலுவகலங்களுக்கு அலைய வேண்டி இருந்தது, அப்போது அங்குள்ள ஒரு நண்பர் (மேலாளர்) எனக்கு கூறிய அறிவுரை (அழிவுரை ?) : என்ன சார் கிளை மேலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி பணத்துக்கு அலைகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதற்கேற்றாற்போல் பல பெயர்களில் வங்கிக் கடன் போட்டு எடுத்துக் கொள்ளவேண்டியதுதானே .முடிந்த அளவுக்குத் திருப்பிக் கட்டுங்கள். மீதமுள்ள தொகை காலப்போக்கில் தள்ளுபடியாகி விடும் என்றார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்து விட்டு இது போன்ற தவறுகளைச் மனதாலும் நினைக்கக்கூடாது என்று உறுதி பூண்டேன் .
இறையருளால் திருமணமும் அது தொடர்பான நிகழ்வுகளும் மிகச்சிறப்பாக எந்தக் குறையும் இன்றி நடைபெற்றன..
காலைச்சிற்றுண்டி நிறைய மீதமிருந்தது. (அப்போது நல்ல சேவை நிறுவனமாய் இருந்த)உதவும் கரங்கள் என்ற அமைப்பைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கப் போக்கு வரத்துக் கட்டணமும் கொடுத்து உணவை அனுப்பி வைத்தோம்
திருமணத்திற்கு பலவிதங்களிலும் உறுதுணையாக இருந்தனர் என் உடன் பிறப்புக்கள், மைத்துனர்கள் , சேக்கின் சச்சாக்கள். குறிப்பாக நூறக்கா ,ஜென்னத் அக்கா முத்தலிப் அண்ணன் , லியாகத் அண்ணன் மைத்துனர் சிராஜுதீன், சக்ரவர்த்தி. சஹா ,கபீர்
மிகச்சிக்கனமாக வாழ்க்கை நடத்தி மூன்றே ஆண்டுகளில் கடனை விட்டு வெளியே வந்தது எனக்கே வியப்பாக இருந்தது.
திருமணம் முடிந்து பாப்டி சேக்குடன் தொடர் வண்டியில் ஏறுவாடிக்குப் பயணித்தோம். பயணத்தில் சாப்பிட முத்தக்கா (மண மகன்) வீட்டில் எங்களுக்குக் கொடுத்தனுப்பிய பிரியாணியும் கோழியும் மிகவும் சுவையாகவும் நிறையவும் இருந்தது. எங்கள் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தோம்..
பணப்பிரச்சனை தவிர்த்து ஏறுவாடி வாழ்க்கை நன்றாகவே இருந்தது.
ஊர் மக்கள் மிகவும் உரிமையோடும் பாசத்தோடும் பழகுவார்கள் .. அந்த ஊர் வழக்கப்படி திருமண வீடுகளிலிருந்து எங்கள் வீட்டுக்கு உணவு கொடுத்து விடுவார்கள். நெய்ச்சோறு குருமா நல்ல சுவையாக இருக்கும்.
பாப்டி ஷேக் எங்கள் வீட்டுக்கு வருவதும் போவதும் என பொழுது இனிமையாகக் கழிந்தது. அருகில் உள்ள குமரி முனைக்கும் அவ்வப்போது சென்று வருவோம்.
கடற்கரையில் அமர்ந்து கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு..
காரையார் என்ற மலைக்கு வங்கி ஊழியர்களுடன் சிற்றுலா போகையில் ஷேக்கையும் அழைத்துச் சென்றேன்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் மஞ்சள் காமாலைக்கு மருந்து வாங்க அரசு மருத்துவர் கூறியபடி காரையார் மலையில் உள்ள ஒரு சிற்றூருக்கப் போனேன்
அந்த ஊருக்குப்போனாலே நோய்கள் எல்லாம் பறந்துவிடும் . அவ்வளவு தூய்மையான காற்று.தரை பளீரென்று தெரியும்படி கண்ணாடி போல் தண்ணீர் ஓடும் ஆறுகள்.. அங்கேயே தங்கி விட எண்ணம் தோன்றும் அளவுக்கு இயற்கை எழில்.
ஒரே ஒரு முறை போய் ஐந்து ரூபாய் மருந்து சாப்பிட்டதில் நோய் முற்றிலும் நீங்கி விட்டது
அடுத்து பேத்தி வரவு., பாப்டி தாய்மை அடைந்தவுடன் பெரிய பதவி உயர்வு பெற்ற மகிழ்ச்சி..ஒரு மலரின் வளர்ச்சியை அரும்பிலிருந்து படிப்படியாகப்பார்ப்பது போல் அணுஅணுவாக ரசித்துப் பிறந்து வளர்ந்த குழந்தை பேத்தி ஆத்திக்கா சாக்கினா அக்தர்.
எந்த மருத்துவ மனைக்குப்போவது என்பதில் பெரும் குழப்பம். ஊரில் ஒவ்வொருவரும் வேறு வேறு மருதுமனைகளைப் பரிந்துரைத்தார்கள். இறுதியில் எங்கள் வங்கி கன்யாகுமரி கிளை மேலாளரின் அண்ணி திருமதி சரஸ்வதி MD.,DGO.,(நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர்) அவர்களிடம் காண்பித்தோம். குடும்ப உறுப்பினர் போல் எளிமையாகப் பேசிப் பழகினார். ,
அவர் குறிப்பிட்ட தேதியில் மருத்துவ மனை சென்றோம்.
போகும் வழியில் பாளையங்கோட்டையில் ஒரு உணவு விடுதியில் மதிய உணவு சாப்பிட்டோம். வீட்டு சமையல் போல் மீன் குழம்பு, பொரியல் மிகவும் சுவையாக இருந்தது..
வசதியான ஒரு தனி அறை எடுத்துக்கொண்டோம்.மருத்துவ மனையில் உள்ள உணவு விடுதியில் தரமான உணவு கிடைத்தது .
அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்ய வேண்டியது அவசியம் என்று மருத்துவர் சொன்னவுடன் மனம் பதைபதைத்துப் போனோம்..இறைவனியம் மனம் உருகி வேண்டிக் கொண்டோம்.
சில மணி நேரங்களில் பிறந்த பிள்ளையைக் காண்பித்தார்கள். பிறந்து சில நாட்களுக்கு இமைகள் மூடியே இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இமைகள் திறந்த நிலையில் அழகிய ரோசாப்பு போல் சிரித்த முகத்துடன் இருந்தது குழந்தை .எப்போதும் சிரிப்பத்தான். ,
குளிப்பாட்டினால் கூட அதை ரசித்துச் சிரிக்கும் சிரிப்பு. ஊசி போட்டால் ஒரு சிறிய அழுகை மீண்டும் சிரிப்பு.
என்னிடம் மிகப் பாசமாக ஒட்டிகொள்ளும் பேத்தி பக்கத்து வீட்டில் இருந்து மூதாட்டி ஒருவர் நாட்டு மருந்து கொடுக்க வருவார். அவர் வந்து நுழைந்தவுடனே கோபப் பார்வையுடன் மருந்து சாப்பிட்டது போல் முகத்தைக் கோனலாக்கிகி கொள்ளும். அடிக்கடி மருந்தும் சாப்பாடும் ஊட்டும் தன் நனிமாவையும் மூக்கைக் கடித்து விடும்.
ஏறுவாடியில் உள்ள ஒரு அங்காடியில் பொருட்கள் மிக மலிவாக விற்பதாகக்கூறி அக்கம் பக்கங்களில் உள்ள ஊர் மக்கள் , அரசு அலுவலர்கள் எல்லாம் வந்து வாங்கிப் போவார்கள்.. நாங்கள் ஒரே முறை அங்கு வாங்கிப் பார்த்தோம்.
திருநெல்வேலி நாகர்கோயில் தொடர் வண்டிப் பாதை நாங்குநேரி ஏறுவாடி வள்ளியூர் வழியே செல்லவேண்டும்.தங்கள் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் டெல்லி வரை சென்று பேசி, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஏறுவாடிக்கு தொடர் வண்டி நிலையம் வராமல் தடுத்து பொது மக்கள் வசவுகளை வாங்கிக் கட்டிக்கொண்ட பெருமை சில ஊர்ப் பெரிய மக்களுக்கு உண்டு.(அந்த நிலங்கள் அதற்குப் பின் விளைச்சலே இல்லாமல் போனது ஒரு கிளைக் கதை.)
சலாகுதீன் என்பது ஏறுவாடியில் மிகவும் பரவலாகப் பயன் படுத்தப் படும் பெயர். வீட்டுக்கு ஒரு சலாகுதீன் இருப்பார். அடையாளம் தெரிவதற்காக ஆடிட்டர் சலாகுதீன் தப்லீக் சலாகுதீன் என்று அடை மொழியோடு சொல்வார்கள்.
(தப்லீக்கில் போவதை மட்டுமே வாழ்க்கை நடை முறையாகக் கொண்டவர் தப்லீக் சலாகுதீன்)
மிகச் செழிப்பான விவசாய நிலங்கள் நிறைந்த அந்த ஊரில் உரக்கடை , துணிக்கடை போன்ற வணிகங்களிலும் விவசாயத்திலும், கட்டிடங்கள் வாடகைக்கு விடுவதிலும் முன்னணியில் இருந்தது ஜனாப் அலி குடும்பம்..மிக(மிக மிக) எளிமையாக இருப்பார்கள்.
வங்கியில் நீண்ட நாள் நகை மதிப்பீட்டாளராக இருந்தவர் மேலாளருக்கும் தெரியாமல் விதிகளுக்குப் புறம்பாக குறைந்த காரட் உள்ள நகைகளுக்கு தொகையைக் குறைத்து கொடுப்பதை பல ஆண்டுகளாக வழமையையாய்க் கடைப்பிடித்து வந்தார். கிளை ஆய்வில் அது கண்டு பிடிக்கப்பட்டு ஒப்பந்தப் பணியாளரான அவர் வெளியே அனுப்பப்பட்டார். தன் செயலால் வங்கிக்கு எந்த வித இழப்பீடும் இல்லை,என்றும் தேவைப்பட்டால் லட்சக்கணக்கில் பிணைத் தொகை செலுத்துவதாயும் சொல்லிப்பார்த்தார்.. ஆனால் வங்கி நிர்வாகம் ஒரே உறுதியாக அவரை வெளியேற்றி விட்டது.
திருநெல்வேலியில் இருந்து சுல்தான் மாமா குடும்பத்தினர் ஏறுவாடி வந்து போவார்கள்.
தம்பி ஷஹா தன் மைத்துனருடன் ஒரு முறையும் குடும்பத்துடன் ஒரு முறையும் நெய்வேலி ராஜா குடும்பத்துடன் ஒரு முறையும் வந்து சென்றார்.
மைத்துனர் பீர் தன் தொழில் நிமித்தமாய் அவ்வப்போது வந்து தங்கிச் செல்வார்.
பாப்டி திருமணத்தை ஒட்டி மாமா குப்பியும் கொஞ்ச நாள் தங்கிச்சென்றார்கள்.
ஆத்திக்கா, பாப்டியை அழைத்துச் செல்ல ஷேக்,சாகுல்,முத்தக்கா வந்தார்கள்.
மைத்துனர் சம்சு வேலை (?) தேடி(??) வந்தார் சென்றார்,.
சையது சச்சா பலமுறை வந்ததில் ஒரு முறை திருவனந்தபுரம் குமரி முனை சென்று வந்தது.
வெளிநாடு சென்ற துணைவனைப் பிரிந்து வாழும் பெண்கள் முகத்தில் ஒரு சொல்லவொண்ணா ஏக்கம் சோகம்
(எங்களைப்போல ) குடும்பத்துடன் ‌, கண்டால் தன்னை அறியாமல் ஒரு காழ்ப்புணர்ச்சி.
திருமணம் வரை முகத்திரையுடன் இருக்கும் பெண்கள் திருமணம் முடிந்தவுடன் அதற்கு விடை கொடுத்து விடுவார்கள்
ஏறுவாடியில் ஷரியத் நீதி மன்றம் ஓன்று இருக்கிறது. அந்தச் சிறிய ஊரில் ஒரு நாளைக்கு ஒரு மணமுறிவு வழக்கு வருவதாய்க் கேள்விப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது.
பெரும்பாலும் மணமுறிவு கோரிக்கைகள் பெண் சார்பில் இருந்துதான் வருமாம். வெளி நாடுகளில் பணி புரிபவர்கள் தம் மனைவியரை தங்கள் வீட்டில் வைத்துச் செல்வார்கள். மாமியார் மருமகள் ஒத்துப்போகாததே மண முறிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
பணத்துக்காக மட்டும் வெளி நாடு செல்பவர்கள் தங்கள் வாழ்க்கையையே இழந்து நிற்கும் பரிதாபம்.
. ஏறுவாடியிலிருந்து வாணியம்பாடிக்கு மாற்றல் வந்தது. என் சேவையைப் பாராட்டி ஊர்ப்பொது நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஐக்கிய ஜமாஅத் நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னார்கள்.
தக்க அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து மதுரையிலிருந்து வாணியம்பாடி திருப்பத்தூருக்கு பயண முன்பதிவு செய்து விட்டேன். . வங்கிக் கிளைப் பொறுப்புக்களை அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டேன்.
கடலூர் பகுதி பற்றி பலரும் பாராட்டியது எனக்கு மிகவும் வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. கடலூர் பொதுவாக யாருக்கும் தெரியாத ஊர் என்பதோடு அந்தப்பகுதி மிக நீளமாக இருந்ததாகத் தோன்றியது.
அக்கா ஜோதி ஒரேடியாக நீ அரசியலில் குதி என்று தன் பாராட்டைத் தெரிவித்தது என் நிறை குறைகள் எனக்கு ஓரளவுக்குத் தெரியும். அதனால் இந்த வயதில் அரசியலில் குதித்து கையைக் காலை உடைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.
அக்கா மெகராஜ் நீ எதாவது நாள் குறிப்பைப(டைரி) பார்த்து எழுதுகிறாயா என்று கேட்டது. எனக்குப் பள்ளிப் பருவத்தில் இருந்தே நாள் குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு, ஆனால் இந்தத் தொடரில் முழுக்க முழுக்க என் நினைவில் பதிந்த நிகழ்வுகளை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தொடரின் நோக்கமே பழைய இனிய நினைவுகளை அசைபோடுவதுதான் (a stroll down the memory lane)
அதற்கு அடுத்த பகுதியான ஈரோடுக்கு தங்கை சுராஜ் மட்டும் மிகவும் நன்றாக இருப்பதாய் தொலைபேசியில் தெரிவித்தது. வேறு யாரும் கருத்துத் தெரிவிக்கவில்லை.
கருத்துத் தெரிவித்தவர்களுக்கு என் நன்றி
இ(க)டைச்செருகல்
விலங்குகள் பற்றி இரண்டு சிறிய வினாக்கள்
1.பாலூட்டிகளில் (mammal) குதிக்க முடியாத ஒரே விலங்கு எது ?
2. வாத்து – எல்லோரும் கேள்விப்பட்டும் பார்த்தும் இருப்பீர்கள். வாத்தின் ஒலிக்கு ஒரு சிறப்புத் தன்மை உண்டு . அது என்ன ?
தெரிந்தவர்கள் கட்செவியில் தெரிவிக்கலாம். அடுத்த பகுதியில் விடை.
இறைவன் நாடினால் பயணம் தொடரும்
14052023 ஞாயிறு
சர்புதீன் பீ
Blog address
, 12 04 2016 அன்று வெளியிட்டதின் மறு பதிப்பு சில மாறுதல்களுடன்

May be an image of 1 person and temple
All reactions:
Ashraf Hameeda T and Lakshmanan B

No comments:

Post a Comment