உடல் நலம்
மதங்கள் வழியே
15052023
உடல் நலம் காத்தல் இறை மெய்ஞானத்தை அடைய மிக அவசியம்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே...'
திருமூலர்
திருமூலர் சொல்லும் உடல் நல, மருத்துவக் குறிப்புகள் மிக நுட்பமானவை
அவை பற்றி இறைவன் நாடினால் பின்பு பார்ப்போம்
கோயில்களில் வலம் வருதல்
தரையில் விழுந்து வணங்குதல், தோப்புக்கரணம்
கிறித்தவ தியானம் விபாசனா தியானம் போன்றவை மிகச்சிறந்த உடல் ,மன நலப்பயிற்சியாக அமைகின்றன
அந்த வகையில் இஸ்லாமிய இறை வணக்கம் ஓரளவு எளிதான, சிறந்த பயிற்சி ஆகும்
உடல்,உடை,இட சுத்தத்தை வலியுறுத்தும் இஸ்லாம ஒலு எனப்படும் உடல் சுத்திகரிப்பு முறை பற்றி விரிவாகச் சொல்கிறது
குறிப்பாக பிடரியை நனைப்பது, காது மடலையும் காதின் பின்புறமும் கழுவுவது
கைகளை கீழிருந்து மேல்நோக்கிக் கழுவுவது இவை உடல்,மன நலம் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன
முதுகுத்தண்டு எளிதில் வளையும்படி flexible ஆக இருந்தால் இளமையும் உடல்நலமும் மிகச்சிறப்பாக இருக்கும்
இ இ வணக்கத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 51முறை(17x3) முதுகு வளைக்கப் படுவதால்
முதுகுத்தண்டு flexible ஆக இருக்கும்
ஒரு சில நிமிடங்கள் ஆகும் தொழுகையை முறையாக செய்தால் நின்ற நிலை அமர்ந்த நிலை உடலை வளைத்தல்,உடலை முறுக்குதல் போன்ற பயிற்சிகள் செய்த பலன் கிடைக்கும்
மேலும் நிலைகள் மாறும்போது இயல்பாக மாறும் மூச்சு
மெதுவாகவும் வாய்விட்டும் ஓதும் மறை வரிகள் இவை தொழுகையை நல்ல மூச்சுப் பயிற்சியாகவும
இறை தியானமாகவும் ஆக்குகின்றன
தொழுகை முழுதிலும் உடல் தளர்ச்சியாக இருக்கு வேண்டும்
விறைப்பாக காவலர் போல் நிற்காமல் தலை சற்று குனிந்த நிலையில் கண்கள் ஸஜ்தா வில் நெற்றி தரையில்
படும் இடத்தைப் பார்க்க வேண்டும்
இது கண்ணுக்கு நல்ல பயிற்சி எனப் படுகிறது
உடல் நிலை மாற்றங்கள் நிதானமாக பொறுமையாக இருக்க வேண்டும்
முதுகை வளைக்கும் ருக்கூ நிலையில் கைகள் நேராக நீட்டிய நிலையில் முழங்காலை இறுகப் பிடித்தபடி இருக்க வேண்டும்
இருப்பு நிலையில் முடிந்தவரை கால்களை மடித்து அமர வேண்டும்
சஜ்தா நிலையில் கை முழுதும் தரையில் படாமல் உள்ளங்கை மட்டுமே தரையில் இருக்க வேண்டும்
சலாம் கொடுக்கும்போது முதலில் வலது புறமுமும் பின் இடது புறமும் நிதானமாக முடிந்தவரை நன்றாக உடலை. வளைக்க வேண்டும்
இப்படி முறையாக இறைவணக்கம் செய்தால் உடல் மனம் ஆன்மீக நலம் சிறக்கும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
15052023 திங்கள்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment