Wednesday, 24 May 2023

தண்ணீர் தண்ணீர்

 




தண்ணீர் தண்ணீர்

 

கண்ட/கேட்ட ஒரு செய்தி

 

தண்ணீரை அடைத்து விற்பனை செய்யும் குப்பியில்

“Contains H2O என்று போட்டிருந்தாம்

உள்ளே இருப்பவை என்ன என்று போடுவது வழக்கம்தானே இதில் என்ன புதுமை என்ற வினா உங்களுக்குள் எழுகின்றதா ?

 

ஒரே ஒரு புதுமை

H20 என்றால் தண்ணீர்தான்

 

உலகில் உள்ள அணைத்து உயிரினங்கள், வேதிப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் அறிவியல், வேதி இயல், உயிரியல் பெயர் இருக்கும்

பெரும்பாலும் கிரேக்க /ரோம மொழிச் சொற்களும் அவற்றின் சுருக்கங்களும் பெயராக அமையும்

 

அந்த வகையில் H2O என்றால் தண்ணீர் என்று எல்லா நாடுகளிலும் அறிவியல் தொடர்புடையோர் புரிந்து கொள்வார்கள்

 

Na Cl என்பது நாம் சமையலில் பயன் படுத்தும் உப்பைக் குறிக்கும்

Au  தங்கம்

Ag வெள்ளி

 

 (homo sapiens, "அறிவுள்ள மனிதன்") என்பது இன்று உலகில் வாழும் ஒரே மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இருசொற் பெயர் அல்லது அறிவியற் பெயர் ஆகும்.

 

Oryza sativa = நெல்

 

இப்படி உயிரியல் பெயர்கள் எல்லாம் இரு சொற்களாக இருக்கும் அதில் முதல் சொல் குடும்பப் பெயர்

அடுத்தது அந்த உயிரினத்தின் தனிப்பெயர்

 

H2O பற்றி சிறிது விளக்கமாகப் பார்ப்போம்

H என்பது ஹைட்ரஜன் வாயுவின் சுருக்கம்

O ஆக்சிஜனின்சுருக்கம்

ஒரு பங்கு ஆக்சிஜனும் ,இரண்டு பங்கு ஹைட்ரஜனும் சேர்ந்து தண்ணீர் ஆகிறது

இரண்டுவாயுப்போருட்கள் சேர்ந்து ஒரு திரவப் பொருளை உருவாக்குகின்றன

ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றி எரியக் கூடாது (combustible)

ஆக்சிஜன் எரியாது ஆனால் எரிவதற்கு துணை நிற்கும் (supporter of combustion )

ஆனால் தண்ணீர் இவை இரண்டுக்கும் மாறாக தீயை அணைக்கும் தன்மை உடையது

சரி தண்ணீரை H, O வாகப் பிரிக்க முடியுமா ? அப்படிப் பிரித்து விட்டால் உலகில் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்கிறார்கள்

 

ஆனால் அப்படி எளிதில் பிரிக்க முடியாது

H, O இரண்டும் இணைந்து H2O உருவாவது ஒரு வேதியல் எதிர் வினை (chemical reaction )

physical reaction னப்படும் இயற்பியல் எதிர்வினையில் சேர்ந்த பொருட்களை எளிதில் பிரித்து விடலாம் இதற்கு எடுத்துக்காட்டாக உப்பும் மணலும் கலப்பது , உப்பும் தண்ணீரும் கலப்பது போன்றவற்றைச் சொல்லலாம்

 

எதற்கு இந்தப்பாடமெல்லாம் இப்போது என்கிறீர்களா ?

கல்லூரி, பள்ளியில் படித்ததை நினைவில் கொள்ளும்போது உடலும் மனதும் இளமையாகி மாணவப் பருவத்துக்குப் போய் விடுகிறது

கோடை கடுமையைத்தாண்டி ஒரு தென்றல் அடிக்கும் உணர்வு

அந்த இனிமை, இளமையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

இ(க) கடைச் செருகல்

தண்ணீரில் எரியும் அடுப்பை தமிநாட்டில் ஒருவர் உருவாக்கியுள்ளதாக 50, 60 ஆண்டுகள் முன்பு ஒரு செய்தி ஊடகங்களில் படித்த நினைவு

நிறைவாக் ஒரு சிறு கதை

நெருப்பு, அமிலம் என எதிலும் பாழாகாத ஆடை ஒன்றை ஒருவர் உருவாக்குகிறார்

பன்னாட்டு ஆடை நிறுவனங்கள் அவரைத் துரத்தி கொலை செய்ய முயற்சிக்கின்றன

 

முடிவில்      ? 

 

விடை தெரிந்தால் சொல்லுங்கள்

இறைவன் நாடினால் மீஎண்டும் சிந்திப்போம்

24052023 புதன்

சர்புதீன் பீ                                      

 

 

 

 

 

No comments:

Post a Comment