தமிழ் (மொழி) அறிவோம்_ கோட்டி
20052023
அழகு
துன்பம்
என பல மாறுபட்ட பொருட்களோடு ஒரு விலங்கின் பெயராகவும் விளங்கும் ஒரு மூன்றெழுத்து கொண்ட சொல் எது?
முதல் எழுத்து க வரிசையில் வருவது
விடை -
கோட்டி
கோட்டி என்பது நல்ல தமிழ்ச் சொல். கோட்டம் என்றால், வளைவு அல்லது கோணல்
நெல்லை வட்டார வழக்கில் பைத்தியம் என்ற பொருளில் வழங்கும் இந்தச் சொல்லுக்கு அகராதி தரும் பொருள்கள்
-
துன்பம்;
பைத்தியம்;
பகடி;
நிந்தை
சபை; குழு; கூட்டம்; பேச்சு; அழகு;
ஒருவரோடுகூடியிருக்கை; கோபுரவாயில்; மனைவாயில்; கிட்டிப்புள்; விகடக்கூத்து
கோட்டி coatiபாலூட்டி வகையைச் சேர்ந்த ஊனுண்ணும் ஒரு
விலங்கு.
விடை அனுப்ப முயற்சித்த
சகோ பாப்டி
ஆ ரா விஸ்வநாதன்
இருவருக்கும் நன்றி
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
குறள் 401
இந்தக் குறளில் வரும் கோட்டி
என்ற சொல்லுக்கு சரியான பொருள் எனக்கு விளங்கவில்லை
புரிந்தவர்கள் தெளிவாக்கினால் தெரிந்து கொள்வேன்
நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
20052023 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment