மாம்பழ (ல)த்து வண்டு
31052023
மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் உண்டா ?
கோடைவந்துவிட்டால் வித விதமான மாம்பழங்கள்
விற்பனைக்கு வரும்
மல்கோவா, பங்கனபள்ளி ,காசலட்டு , ருமானியா
என பல பெயர்களில், பல சுவைகளில் மாம்பழம் சாப்பிட்டிருப்பீர்கள்
வண்டுண்ட மாம்பழம்
கேள்விபட்டதுண்டா , சுவைத்துண்டா ?
வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து
அனுபவித்த எங்கள் அத்தாவுக்கு மாம்பழம் என்றால் உயிர்
எங்கே கிடைத்தாலும் உடனே வாங்கி
சாப்பிட்டு விடுவார்கள்
மாம்பழம் சாப்பிட்டுவிட்டு சூடாக பால்
குடித்தால் அது மாம்பழத்தின் கேடுகளை நீக்கி முழுதும் சத்தாக மாற்றி விடும்
இது அத்தா சொல்லிக் கொடுத்த பல உணவுக்
குறிப்புகளில் ஓன்று
நாங்கள் ஆம்பூரில் இருக்கும்போது நிறைய மாம்பழங்கள்
கிடைக்கும்
ஆம்பூர் பெங்களூருக்கு அருகில் என்பதால் மல்கோவா
பழங்கள் அதிகமாகக் கிடைக்கும்
தோல் பச்சை நிறமாகவே இருப்பது மல்கோவாவின்
சிறப்பு
எங்கள் ஊரில் கோடையில் மாம்பழம் நிறைய
வரும் ,
அதோடு கண்மாய் வற்றும்போது விரால் மீன்கள்
மலிவாக விற்பார்கள்
விளைவு எங்கு பார்த்தாலும் கொய் என்று ஈ
மொய்க்கும்
அதற்காக ஒன்றை ஓன்று சுவையில் மிஞ்சும்
விரால் மீனையும் மாம்பழத்தையும் சாப்பிடாமல் விட முடியுமா !
பொதுவாக எங்கள் ஊர் மக்களுக்கு சுவை
அறியும் திறன் அதிகம் ( நாக்கு நீளம் என்று சொன்னால் மரியாதைக் குறைவாக இருக்கும் )
குறைந்த செலவில் நிறைந்த சுவை – இது
எங்கள் ஊரின் சிறப்பு
பொடிக் கறிக் குழம்பு , ரொட்டி குழம்பு சுவை
பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கிறேன்
தெரு ஓரங்களில் இட்லி விற்பவர்கள்
தண்ணியாக ஒரு தேங்காய் சட்னி கொடுப்பார்கள்
அது இப்போது திருப்பத்தூர் சட்னி என்ற பெயரில்
யூ டிபில் எங்கள் ஊரின் பெயரையும் சுவையையும் பரப்பி வருகிறது
70 வயதான இளைஞர் எங்கள் சச்சா .
சளைக்காமல் 4, 5 கி மீ நடந்து
அச்சுக்கட்டில் போய் இட்லி வாங்கி வருவார் காரணம் அங்கு சாம்பார் சுவையாக இருக்குமாம்
சரி வண்டுண்ட மாம்பழம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே
என்ற உங்கள் உரத்த சிந்தனை என் காதில் விழுகிறது
எங்கள் ஊரில் கரீம் அண்ணன் கடையை அறியாத
என் வயதினர் இருக்க முடியாது
மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு
மினி சூப்பர் மார்கெட்
தின்பண்டங்கள் , வெற்றிலை பாக்கு , சோடா, பழங்கள்
எல்லாம் இருக்கும்
இட்லி வடிவில் வெள்ளை நிறத்தில் ஒரு துணி
சோப்பு –பெயரே இட்லிக் கட்டிதான் இந்தக் கடையின் சிறப்புகலீல் ஓன்று
கோடையில் இங்கும் நிறைய மாம்பழங்கள் விற்கும்
அங்குதான் வண்டுண்ட மாம்பழம் பற்றி கேள்விப்பட்டேன்
, சுவைத்திருக்கிறேன்
மாம்பூவில் உள்ள மதுவை அருந்த வரும் வண்டு
பூவில் முட்டை இட்டு விடும்
முட்டை குஞ்சாகி வண்டாகி பறப்பதற்குள் மாம்பூ
பிஞ்சாகி காயாகி கனிந்து விடும் . அதனால் வண்டு வெளியே பறக்க முடியாது
காற்றே இல்லாவிட்டலும் மாம்பழத்தில் உள்ள
சர்க்கரை சத்தை உண்டு உயிர் வாழும்
பழத்தை நறுக்கும்போதோ கடித்துத் தின்னும்போதோ
வண்டு சர் என்று பறந்து செல்லும்
இதுதான் வண்டுண்ட மாம்பழம்
(அப்படி இல்லைஎன்றால் பழம் அழுகும்போது
எளிதாகப் பறந்து விடுமாம் வண்டு )
சரி வண்டுண்ட மாம்பழத்துக்கு தனி ஒரு சுவை
உண்டு என்பது உண்மையா ?
ஆம் என்கிறார்கள் உண்டு சுவைத்தவர்கள்
மனிதனுக்கு இல்லாத ஒரு சக்தி வண்டுக்கு
உண்டு
எந்த மரத்துக்கு செயற்கை உரம் ,
மருந்துகள் அதிகம் சேர்க்கவில்லையோ அந்த மரத்தின் பூவில் உள்ள மதுவைத்தான் வண்டு
தேடிப் பிடித்து உண்ணுமாம் .
.இயற்கையாகப் பழுத்த பழத்துக்கு சுவை அதிகம்
தானே
எனவே நீங்களும் வண்டுண்ட பழத்தை தேடிப்
பிடித்து உண்ணுங்கள்
இ(க)டைச்செருகல்
சீர்காழி கோவித்த ராஜன் பாட்டுக் கச்சேரி
சென்னை மாம்பலத்தில்
மாம்பழத்து வண்டு என்பதை மாம்பலத்து வண்டு
என்று பாடி மக்களை மகிழ்வித்தாரம்
( அதே போல் மும்பையில் அவர் கச்சேரியில் ஆடு
பாம்பே என்ற பாடல்- பாம்பே என்பதை நீட்டி பலமுறை பாடினாராம் )
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
31052023புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment