Monday, 31 March 2025

ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்






 ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்

பசித்திருந்து பிறர் பசியை உணர்ந்து அள்ளிக் கொடுத்தோம்
தனித்திருந்து
விழித்திருந்து
தவம் செய்தோம்
சுவனம் எனும் உயர்
பதவி வேண்டி
எல்லா நலன்களும் எல்லோரும் பெற இந்த
ஈகைத் திருநாளில்
இல்லை என்று சொல்லும் மனம் இல்லாத
இறைவனிடம் கையேந்துகிறேன்
வாழ்க வளத்துடன்
சர்புதீன் பீ
31032025

Saturday, 29 March 2025

Score March 2025 Ramalan postings

 




Score March 2025 Ramalan postings

Names of only those who sent first answers
Total questions 29
Mr Sirajuddin stands first with
19 first correct answers
Next Ms Sharmatha 5
Ms Shireen Faruk 2
Ms Meharaj 1
Greetings and Congratulation
N0 answer received for 2
Thanks to all participants
30042025 Sunday
Sherfuddin P

ரமளான் பதிவு 29 சுரா 112 113 114 30 032025 ஞாயிறு

 



ரமளான் பதிவு 29

சுரா 112 113 114
30 032025 ஞாயிறு
குரான் சூ ரா 112,
113 114
இவற்றின் சிறப்பு என்ன >
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் முதல் சரியான விடை
ஷர் ம தா
112 அல்-இக்லாஸ் (
இந்த ரமளான் தொடரின் முதல் பதிவில்
சூ ரா.112 அல்-இக்லாஸ் பற்றி எழுதியிருக்கிறேன்
இப்போது
சிறிய சுராதான் ஆனால் மிக அதிகமாக ஓ தப்படும் சுராக்களில் ஒன்றாக இருக்கி. றது ..
காரணம் அதன் பொருள்
ஏகத்துவம் நேர்மை என பல பொரு ள் கள் கொண்டது
இறைவனுக்கு வரையறை சுருக்கமாக சொ ல்கிறாது
குரானில் மூன்றில் ஒரு பங்கை இங்க சூரா குறிப்பதாக சொல்லப்படுகிறது
குரான் சுராக்களின் தலைப்புகள் பெரும்பாலும் அந்த சுறாவில் வரும் சொல்லாகத்தான் இருக்கும்
ஆனல் இந்த சுராவின் தலைப்பான அல்-இக்லாஸ்
சுறாவில் இல்லை
அல்-ஃபலாக்
[ 1 ] ( அரபு : ٱلْفَلَقِ , அல்-ஃபலாக் ) என்பது குர்ஆனின் 113 வது சூரா
ஒரு சுருக்கமான ஐந்து ஆயத் (வசனம்) கொண்ட இந்த
சூரா, தீமையிலிருந்து இறைவனி டம் பாதுகாப்பு கேட்கிறது:
۝ [ 2 ] "நான் விடியற்காலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன், [ 3 ] [ o 1 ] என்று கூறுவீராக.
۝ அவன.து படைப்பின் தீமையிலிருந்து [ பக்கம் 1 ]
இருள் குடியேறும்போது அதன் தீமையிலிருந்தும் [ q 1 ]
۝ முடிச்சு ஊதுவோரின் தீமையிலிருந்து [ 5 ] [ r 1 ]
பொறாமை கொண்டவன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் ." [ 3 ] [ 9 ]
நிறைவு அத்தியாயம் ( sūrah )114 வது வுடன் ( அல்-நாஸ் ), இனணைந்து அல்-முஅவ்விதாதைனை புகலிடங்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன ஏனெனில் இரண்டும் "நான் அடைக்கலம் பாதுகாவல் தேடுகிறேன்" என்று தொடங்குகின்றன; அன்-நாஸ் அல்லாஹ்விடம் உள்ளே இருந்து தீமையிலிருந்து பாதுகாப்புத் தேடச் சொல்கிறது,
அல்-ஃபலக் அல்லாஹ்விடம் வெளியில் இருந்து தீமையிலிருந்து பாதுகாப்புத் தேடச் சொல்கிறது, எனவே இரண்டையும் படிப்பது ஒரு நபரை தனது சொந்த தீமையிலிருந்தும் மற்றவர்களின் தீமையிலிருந்தும் பாதுகாக்கும்.
முதல் வசனத்தில் உள்ள "அல்-ஃபலக்" என்ற சொல் , 'பிரித்தல்' செயல்முறையைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல், பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் ஒரு குறிப்பிட்ட வகை பிளவு, அதாவது 'விடியல்' அல்லது 'விடியல்' என்று வரையறுக்கப்பட்டுள்ளது. [ 10 ]
வசனம் 4 என்பது குறிசொல்பவரின் நுட்பங்களில் ஒன்றைக் குறிக்கிறது : பகுதியளவு முடிச்சு போடுதல் , சாபமிடுதல், முடிச்சில் துப்புதல் மற்றும் அதை இறுக்கமாக இழுத்தல். இஸ்லாமியத்திற்கு முந்தைய காலத்தில், குறிசொல்பவர்கள் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் சக்தியைக் கூறினர். குறிசொல்பவர்களின் கூற்றுப்படி, சாபம் நீங்குவதற்கு முன்பு முடிச்சு கண்டுபிடிக்கப்பட்டு அவிழ்க்கப்பட வேண்டும். இந்தப் பழக்கம் வசனம் 4 இல் கண்டிக்கப்படுகிறது
114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
114:2
114:2. (அவனே) மனிதர்களின் அரசன்.
114:3. (அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) இறைவன்.
ۙ‏
114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கைவிட்டும் (இறைவனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்).
114:5. அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
ِ‏
114:6. (இத்தகையோர்) ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கின்றனர்.
.
தோற்றுவாயாக அல் பாத்திஹா வில் துவங்கிய இந்த ரமளான் சிறப்புப் பதிவுத் தொடரை
114 அல்-நாஸ் சூராவோடு நிறைவு செய்கிறேன்
30 பதிவுகளும் வெளியிடும் அளவுக்கு
உடல் நலம் , மன நலம்
கணினி நலம் . இணைய நலம் மின்சார நலம் என எல்லா நலன்களையும் வாரி வழங்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு
நன்றி நன்றி நன்றி
பிழைகள் இருந்தால் மன்னிக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்
பெரும்பாலும் எல்லா நாட்களிலும் வினாவுக்கு விடை அனுப்பிய
சகோ சி ராஜூதீன்
மிகப்பல நாட்கள் அனுப்பிய சகோ ஷர் ம தா அவ்வப்போது
அனுப்பிய சகோ ஷிரீன் பாரூக் , மெகாராஜ்
எப்போதாவது அனுப்பிய சகோ நெய்வேலி ராஜா
கருத்துக்கள் தெரிவித்த சகோ ஜோதி , தலலத் ஷகா
அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் அடுத்து
சிந்திப்போம்
நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்றி ஈகை திருநாளை எதிர் நோக்கி இருக்கிறோம்
எல்லாம் வல்ல ஏக இறைவனை
உடல் நலம் மன நலம் ஆன்ம நலம் பொருள் நலம் எல்லாம் நிறைவாக அருளி வாழும் காலம் முழுதும் மலிழச்சியாக மன அமைதியோடு கூடிய ரஹ்மத்தும் பரக்க தும் நிறைந்த வாழ்க்கையாக அமைததுத் தர
வேண்டுகிறேன்
29 ரமளான் (09) 1446
30 032025 ஞாயிறு
சர்புதீன் பீ

ரமளான் பதிவு 29 சுரா 24தனி மனித, சமூக ஒழுகக நெறிகள் 29 032025 சனிக்கிழமை






 ரமளான் பதிவு 29

சுரா 24தனி மனித, சமூக ஒழுகக நெறிகள்
29 032025 சனிக்கிழமை
சூ ரா 24 சொல்லும் தனி மனித, சமூக ஒழுகக நெறிகள் எவை ?
விடை
சூரா 24, அந்-நூர் தனிமனித ஒழுக்க நெறிகளைப் பற்றி அதிகம் பேசுகிறது. இந்த சூரா ஒரு தனிமனிதன் எப்படி ஒழுக்கமாக வாழ வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், ஒருவர் மற்றவருடன் எப்படி பழக வேண்டும் என்பதையும் கூறுகிறது. இந்த சூரா சமூகத்தில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
திருமணத்திற்கு புறம்பான உறவுகள்: சூரா 24 திருமணத்திற்கு புறம்பான உறவுகளைக் கடுமையாக கண்டிக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
கண்ணியமான நடத்தை:
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் மற்றும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். 24:3031
வீட்டிற்குள் நுழையும் ஒழுங்கு: ஒருவரின் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறது. 24:27
புறம் பேசுதல்: மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதையும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதையும் இது கண்டிக்கிறது.
சாட்சிகள்: ஒரு குற்றச்சாட்டை நிரூபிக்க நான்கு சாட்சிகள் தேவை என்பதை வலியுறுத்துகிறது.
சமூக ஒழுக்கம்:
சூரா 24 தனிமனித ஒழுக்கத்தை மட்டும் பேசாமல் சமூக ஒழுக்கத்தையும் வலியுறுத்துகிறது.
தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக ஒழுக்கம் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் சமூக ஒழுக்கம் தானாகவே சரியாக இருக்கும். ஒருவர் மற்றவருடன் எப்படி பழக வேண்டும் என்பதையும் கூறுகிறது
ஆண் பெண் உறவில் ஒழுக்கக் கேடுகளுக்கு உரிய தண்டனைகள்
பொய்யாக சான்று சொல்வோருக்கு உள்ள தண்டனைகள்
பிறர் வீடுகளுக்குள் நுழைய அனுமதி, கணவன் மனைவி இருக்கும் அறைக்குள் நுழைய அனுமதி, விருந்துக்குச் செல்லும் ஒழுங்கு .
ஆணும் பெண்ணும் கூடும் கூட்டங்களில் ஒழுங்குகள்
இறைவனே இவ்வுலகிலும் அவ்வுலகிலும் ஒளியாக விளங்குகிறான் இறைவனை வழிபட நம்பிக்கை உடையோர் கூடும் இடங்களில் இவ்வொளி காணப்படும்
தகுதி உள்ளோர் திருமணம் செய்து கொள்ளவேண்டும்
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர், அவர்களது சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
24:15. இதனை நீங்கள் (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்கு (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் சொல்(லித் திரி)கின்றீர்கள்; இன்னும், இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள்; ஆனால், அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய(பாவமான)தாக இருக்கும்.
24:58. நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களான அடிமைகளும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன்வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், (மேல் மிச்சமான) உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் உச்சிப்பொழுதிலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும் - ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும்; இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல் கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் சுற்றி (வந்து) கொண்டிருப்பவர்கள்: இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
24:59. இன்னும், உங்களிலுள்ள குழந்தைகள் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்களும் அவர்களுக்கு முன்னுள்ள (மூத்த)வர்கள் அனுமதி கேட்பதுபோல் அனுமதி கேட்கவேண்டும்; இவ்வாறே, அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் முதல் சரியான விடை
நெய்வேலி ராஜா
இன்றைய வினா
குரான் சூ ரா 112,
113 114
இவற்றின் சிறப்பு என்ன >
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
28 ரமளான் (09) 1446
29 032025 சனிக்கிழமை
சர்புதீன் பீ

Thursday, 27 March 2025

• ரமளான் பதிவு 27 அன்னை ஆயிஷா ரலி 28 032025 வெள்ளி

 





• ரமளான் பதிவு 27

அன்னை ஆயிஷா ரலி 

28   032025 வெள்ளி 

பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டாமா? 

திருமறையின் எந்தப் பகுதியில் வரும் வசனத்தின் பகுதி இது ?

சு ரா  24 அன் நூர்  :வசனம் 13

சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் 

சகோ ஷர்மதா  முதல் சரியான விடை

சீராஜூதீன் 

2413 யார. அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டாமா? எனவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவரவில்லையெனில், அவர்கள்தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.ப்பல்ஆலமீன்

இது போன்ற கருத்து வசனம் 24:4. 24:12 இரண்டிலும் வேறு சொற்கள் பொருளில் வருகிறது 

24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர், அவர்களது சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

24:12. இதனை நீங்கள் கேள்விப்பட்டபொழுது நம்பிக்கையாளர்களான ஆண்களும், நம்பிக்கையாளர்களான பெண்களும் தங்களைப் (போன்ற நம்பிக்கையாளர்களைப் பற்றி) நல்லதையே எண்ணி, "இது பகிரங்கமான அவதூறு" என்று கூறியிருக்கவேண்டாமா?

ஆனால்  24: 13 நபி  பெருமானை கேட்பது போல தோன்றுகிறது  சுருக்கமான கேள்வி –

ஆனால் சுருக்கென்று குத்தும் கேள்வி . ஆழ்ந்த கருத்துச் செறிந்த கேள்வி 

கேட்பவனோ ஏக இறைவன் 

இதற்கு விடை, விளக்கம் காண இந்தக் கேள்வி எழ காரணம் என்ன , காரணமான அவதூறு என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம் 

தடைகள் எதிர்ப்புகளை மீறி இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது 

குறிப்பாக பத்ருப் போரின் வெற்றிக்குப்பின் பலரும் மனம் விரும்பி ஏக இறைக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முன் வருகிறார்கள் 

தங்கள் முயற்சிகள் தோல்வி அடைவது கண்ட எதிர்ப்பாளர்கள் , வேறு வழிகள் பற்றி சிந்தித்து அவதூறு பரப்புதல் வீண் பழி சுமத்துதல் குழப்பம் உண்டாக்குதல் போன்ற வழிகளில் ஈடுபடுகிறார்கள் 

அவர்களுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு 

நாயகங்களின் அருமை மனைவி, அபு பகர் மகள் அன்னை ஆயிஷா பற்றிய அவதூறு 

இரவில் ஓர் இடத்தில் தங்கியிருந்த நபி பெருமான் அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் அதி காலையில் மீண்டும் மதினா நோக்கிப் பயணிக்கத் துவங்குகிறார்கள் 

அன்னை ஆயிஷா புறப்பட சற்று நேரமாகிவிடுகிறது . மிக மெலிதாக எடை குறைவாக இருக்கும் அன்னை அவர்கள் உள்ளே உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்களுடைய பல்லக்கை தூக்கி ஒட்டகத்தின் மேல் வைக்க, அது மதீனா நோக்கிச் செல்கிறது தனித்து விடப்பட்ட அன்னை தன்னைத் தேடி யாரவது வருவார்கள் என்று காத்திருந்து அப்படியே தூங்கி விடுகிறார் 

அந்த வழியே வந்த சத்வான் பின் முஆட்டை சுலமி( Safwan bin Mu'attal Sulami )

புனித நபியின் துணைவி தனியே இருப்பது கண்டு பதறி ஒட்டகத்தை நிறுத்தி அதன் மேல் அன்னை அவர்கள் ஏறி அமரச் செய்து ஒட்டகத்தின் மூக்கனாங்கயிறைபிடித்தபடி ஒட்டகத்தை ஒட்டி வருகிறார் 

இது போதாதா ! வெறும் வாயை மென்று கொண்டிருந்தவ்ர்களுக்கு அவல் வெல்லம் தேங்காய் எல்லாம் சேர்ந்து கிடைத்தது போல் கடித்து மென்று துப்பித் தூற்றுகிறார்கள் எதிரிகள் . 

இந்த தூற்றலுக்குத் தலைமை தாங்கியவன் அப்துல்லா பின் உபை

நபியின் துணைவி வழி தவறி விட்டார் என்று வாய் கூசாமல் தூற்றினான் 

மதீனா போனவுடன் உடல் நலம் குன்றி ஒரு மாதம் படுக்கையில் இருந்த அன்னைக்கு இது எதுவும் தெரியாது 

இருந்தாலும் உடல் நலமின்றி இருந்தால் உடன் ஆறுதல் சொல்லல வரும் நபி அவர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக வரவில்லையே என்ற உறுத்தல் இருந்தது . ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது

தன உறவினர் ஒருவர் மூலம் நடந்தவை பற்றி அறிந்த அன்னை நிலை குலைந்து போய் அன்று இரவு முழுதும் அழுது கொண்டே இருந்தார் 

இதற்கிடையில் நபி அவர்கள் தனக்கு நெருக்கமான அலியிடமும் உசாமா பின் சய்யிதிடமும் அன்னை பற்றி விசாரிக்க , நல்லதைத் தவிர வேறு எதையும் நான் அன்னையிடம் கண்டதிலை என சய்யித் சொல்கிறார் .

அலி சொன்னபடி அன்னை ஆயிஷா அவர்களின் பணிபெண்ணைக் கூப்பிடடு விசாரிக்க அவரும் நல்லதைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை என்கிறார் 

ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் நபிகள் அன்னை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவர் அருகில உட்கார அன்னையின் தாய் தந்தையும் உட்காருகிர்ர்கள் 

நபி பெருமான் சொல்கிறார்

ஆயிஷா உன்னைப்பற்றி கேள்விப்பட்டேன் 

உன்மேல் குற்றம் இல்லை என்றால் இறைவன் அதை –உன் தூய்மையை வெளிகாண்பிப்பான்

நீ தவறு செய்திருந்தால் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் இறைவன் உன்னை மன்னித்து விடுவான் என்கிறார்

அன்னை ஆயிஷாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது 

இதற்கு தன் தந்தை தாய் தகுந்த மறுமொழி சொல்வார்கள் என்று அவர்கள் முகம் பார்க்க அவர்களோ என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று சொல்லி விடுகிறார்கள் 

இப்போது அன்னை ஆயிஷாவே பேசுகிறர்கள், வாதிடுகிரறாக்கள் ,, வழக்காடுகிறார்கள் 

“ நான் தவறு செய்யவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பம் மன நிலையில் இல்லை 

நான் செய்யாத தவறை செய்ததாக ஒப்புக்கொண்டால் நீங்கள் நம்பி விடுவீர்கள்

பொறுமை காப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை 

உண்மையை அறிந்த இறைவன் அதை வெளிக்காட்டுவான் என ஈனக்கு நம்பிக்கை இருந்தது

ஆனால் எனக்காக ஒரு இறை வசனத்தை இறக்கி வைத்து அதை காலத்துக்கும் மக்கள் படித்து உணர வைப்பான் என நினைக்கவில்லை 

நபி பெருமான் கனவில் வந்து உண்மை வெளியாகும் என நினைத்தேன் 

இந்த நிலையில் அந்தக் கடும் குளிர் காலத்தில் நபி அவர்கள் முகத்தில் முத்து முத்தாய் வேர்வைத் துளிகள் – இறை வசனம் இறங்கப் போவதன் அறிகுறியாக 

நாங்கள் மூச்சைக் கூட அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தோம் 

தவறு செய்யாத எனக்கு துளியும் பயம் அச்சம் இல்லை 

ஆனால் என் பெற்றோரோ இறைவன் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற நடுக்கத்தில் இருந்தார்கள் 

வஹி வந்து முடிந்த பின் நபிகள் முகத்தில் நிம்மதி, மகிழ்ச்சி 

வாழ்த்துகள்

ஆயிஷா , இறைவன் உன் தூய்மைக்கு சான்று பகர்ந்து விட்டான் சென்று சொல்லி வசனங்கள் 24-- 11-21).ஐ படித்துக் காண்பித்தார்கள் 

உடனே என் தாய் எழுந்து என்னிடம் – நபி பெருமானுக்கு நன்றி சொல் என்றார்கள்

நான் நபிக்கோ ,உங்களுக்கோ , தந்தைக்கோ நன்றி சொல்ல மாட்டேன் 

இறைவனுக்கு மட்டுமே என் நன்றி

என் மேல் சுமத்தப்பட்ட வீண் பழியை மறுத்து நீங்கள் யாரும் ஒரு சொல் கூட சொள்ளவில்லையே என்று சொல்லி விட்டேன் 

ஒரு பெண்ணின் – வீண் பழி சுமத்தப்பட்ட ஒரு கற்புக்கரசியின் கோப தாபங்களை உணர்சசிகளை , எண்ண ஓட்டங்களை மிக அழகாக , அமைதியாக வெளிப்படுத்துகிறார் அன்னை 

சற்றும் தயங்காமல் என் நன்றி நபிக்கோ , பெற்றோருக்கோ இல்லை என்று சொல்கிறார் 

64 வ்சனங்கள் கொண்ட இந்த சூராவில் மிகப்பல செய்திகள் சொல்லப்டுகின்றன 

இந்த இழி செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் அவரவர் பங்குக்கேற்ப கடும் தண்டனை உண்டு (24:11) 

நீங்கள் இதனைச் செவியுற்றபோதே நம்பிக்கையுள்ளவர்கள் ஏன் தங்களைப்பற்றி நல்லெண்ணம் கொள்ளவில்லை ?

இது ஒரு அப்பட்டமான அவதூறு என்று ஏன் அவர்கள் கூறவில்லை:? •24:12

  24 13 யார. அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டாமா? எனவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவரவில்லையெனில், அவர்கள்தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.ப்பல்ஆலமீன்2. 

இதுதான் துவக்கத்தில் பார்த்த வசனம் 

(என் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது )

அறிஞர்கள் கூறும் விளக்கம் :

நபி பெருமான் குற்றம் சாட்டப்பட்டவரின் துணைவன் என்பதையும் தாண்டி ஒரு மன்னர், தலைவைர் ,ஆட்சியாளர் 

அவர் விரைவாக ஒரு முடிவு, கருத்து சொன்னால் அது ஒரு தலைப் பட்சமான தீர்ப்பாகக் கருதப்படும் . பழி நீங்காது 

எனவே இறைவன் தீர்ப்பு வரும்வரை நபி அமைதி காத்தார்கள் . இறைவன் மொழிக்கு மாற்று ஏது

இதே விளக்கம்தான் அன்னையின் பெற்றோர் பற்றியும் சொல்லப்படுகிறது 

(பின் யாரை இறைவன் கேட்கிறான் ? ) 

சான்று பகர்வோர் 4 பேர் இல்லாமல் குற்றம் சுமத்திய அவர்கள்தான் இறைவன் பார்வையில் குற்றவாளிகள் (24:13)

இம்மையிலும் மறுமையிலும் இறைவனின் அருளும் கருணையும் உங்களுக்குக் கிடைகாகம்ல் போயிருந்தால் நீங்களும் ஒரு பெரும் தண்டனைக்கு உள்ளாகி இருப்பீர்கள்(24:14)

ஏதும் அறியாத ஒரு செய்தியை நீங்கள் ஒருவொருக்கொருவர் பரப்பிக் கொண்டிருந்தீர்கள் 

உங்களள் பார்வையில் இது ஒரு எளிய , சாதர்ணமான செய்தியாய் இருக்கலாம்.

ஆனால் இறைவன் பார்வையில் இது ஒரு மிகக் கொடிய செயல் (24:15)

கேள்விப்பட்டவுடனே இது மிகப் பெரும் வீண் பழி , இது பற்றிப் பேசுவதே தவறு என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை (24:16)

நீங்கள் நம்பிக்கை கொண்டவர் என்பது உண்மையானால் இது போன்ற ஒரு தவறை மீண்டும் செய்யாதீர்கள் என இறைவன் தெளிவு படுத்துகிறான் (24:17,18)

மானக் கேடான செயல் பரவிட விரும்புகிறவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் கடும் வேதனை நிச்சயம்

இச்செயல் படு மோசமான விளைவுளை உண்டாக்காமல் காத்தது இறைவன் கருணை , பரிவால்தான் (24:19. 20)

தவறோ சரியோ 

சில தமிழ் இலக்கிய வரிகள் என நினைவில் வரு கின்றன 

உரை சால் பத்தினிக்கு -----------

பெண்ணின் பெருந்தக்க --------------

இன்றைய வினா     சுரா 24 சொல்லும் தனி மனித, சமூக ஒழுகக நெறிகள் எவை ? 

 இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில்   சிந்திப்போம்

நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன் 

27ரமளான் (09)  1446 

28  032025   வெள்ளி 

சர்புதீன் பீ

Wednesday, 26 March 2025

ரமளான் பதிவு 26 மன்னன் மகள் பதிமா ரலி 27 032025 வியாழன்






 ரமளான் பதிவு 26

மன்னன் மகள்
27 032025 வியாழன்
அல்லாஹ்வின் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்ட கைதிக்கும் உணவளிப்பார்கள்.
அல்குர்ஆன் (76:8)
இந்த சிறிய வசனத்தின் பின்னணியாக ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வு இருக்கிறது (பள்ளிவாசலில் உரையில் காதில் விழுந்தது )
அது என்ன ?
சுவர்க்கத்தின் பேரரசி அன்னைபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வாழ்வில்
மனதை நெகிழ வைக்கும் ஒரு நிகழ்வே இதற்கு விடை
சரியான விடை எழுதிய வாழ்த்து பாராட்டு பெறும்
சகோ
ஷிரீன் பாரூக்குக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
ஹதீஸ் சான்றுடன் விரிவான விடை –நன்றி
"ஒரு முறை
சுவர்க்கத்தின் பேரரசி அன்னைபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அன்பு பிள்ளைகளான
ஹஸன்-ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹுமா
இருவருக்கும் கடுமையான உடல் நலக்குறைவு
நோய் நீங்கி நலமடைந்தால் மூன்று நோன்புகள் வைப்பதாக அன்னைபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நேர்ச்சை செய்து கொண்டார்கள்.
அல்லாஹ்வின் அருளால் பிள்ளைகள் முழுமையாக நலமடைந்தனர்."
"நோன்பு வைக்க வீட்டில் உணவில்லை ஆனாலும் நேர்சையை நிறைவேற்ற தண்ணீர் குடித்து நோன்பு வைத்தார்கள்.
"நோன்பு திறக்க உணவு வேண்டும் என்பதால் கணவர் ஹஜ்ரத்
அலிரலியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் சொன்னார்கள்.
"அன்புகணவரே!
ஷம்ஊன் என்ற யூதனிடம் பஞ்சு வாங்கி வாருங்கள். அதை நூலாக்கி தருகிறேன்.!" என்றார்கள்.
ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் யூதனிடம் சென்றார்கள் அவன் ஒரு மூட்டை பஞ்சைக் கொடுத்து இதை நூலாக்கி தந்தால்..
3-மரக்கால்சோளம்தருகின்றேன். என்றான்.
அன்னைபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்ஒருமூட்டைபஞ்சை
மூன்றாகப் பிரித்து.. அதில் ஒரு பங்கை நூலாக நூற்று கொடுத்தார்கள்..!"
அதற்கு கூலியாக "அந்த யூதன் கொடுத்த. ஒரு மரக்கால் சோளத்தை அரைத்து மாவாக்கி ரொட்டி சுட்டார்கள்."
நோன்பு திறந்து ரொட்டியைசாப்பிடப்போகும் நேரம்
வாசலில் ஒருவர்
அம்மா! பாத்திமாஅம்மா!
பசிக்குதும்மா!
நான் ஒருமிஸ்கீன் சாப்பிட ஏதாவது கொடுங்ம்மா! என்ற குரல் கேட்டதும் அத்தனை ரொட்டி களையும் அந்த ஏழைமிஸ்கீனுக்கு கொடுத்து விட்டார்கள்..!"
இரண்டாவதுநாளும்
அன்னைபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாஅவர்கள் அதே போல
கூலியாக வந்த சோளத்தை அரைத்து மாவாக்கி ரொட்டி சுட்டார்கள். நோன்பு திறந்து ரொட்டியை வாயருகில் கொண்டு போகும்போது.."
"பாத்திமாஅம்மா!
அத்தா-அம்மா இல்லாத நானொரு அனாதைஅம்மா! பசிக்குதும்மா! சாப்பிட ஏதாவது கொடுங்கம்மா..!" என கேட்டதும்
உடனே "அந்த அனாதைமுஸாபிருக்கு
எல்லா ரொட்டி களையும் கொடுத்து விட்டார்கள்.!"
மூன்றாம்நாளும்
"பசி மயக்கத்தில்
"நோன்பு திறந்து சாப்பிட போகும்போது வாசலில் ஒருவர் அம்மா நான் ஒரு சிறைக்கைதி என்னை காபிர்கள் கைது செய்து எனக்கு உணவு கொடுக்காமல் பலநாள் பட்டினிப்போட்டுவிட்டார்கள்..""சாப்பிட உணவு கொடுங்கம்மா! என கேட்டதும் எல்லா ரொட்டிகளையும் கொடுத்து விட்டார்கள்..!"
"அன்னைபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நோன்பு வைத்த செய்தியைக் கேள்வி பட்டதும்.."
அகிலத்தின் அருள் அண்ணல்நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஓடி வந்தார்கள்.
மூன்று நாட்கள் பட்டினியால் சுருண்டு படுத்துக் கிடந்த
அன்னைபாத்திமா(ரலி) அவர்களை அணைத்து கொண்டு
மகளே! பாத்திமா!நீசெய்த தியாகத்தை சேவையை.. அல்லாஹ்
கபூல் செய்து கொண்டானம்மா.!"
ஹஜ்ரத்ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக அல்லாஹ் எனக்கு
வஹீ அறிவித்தான்
وَيُطْعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسْكِينًۭا وَيَتِيمًا وَأسِيرً
அல்லாஹ்வின் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்ட கைதிக்கும் உணவளிப்பார்கள்.
அல்குர்ஆன் (76:8)
وَجَزَىٰهُم بِمَا صَبَرُوا۟ جَنَّةًۭ وَحَرِيرًۭا
அவர்கள் பட்டினி கிடந்து பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அல்லாஹ் கொடுப்பான்.
(அல்குர்ஆன் 76:12)
என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
"அன்பிற்குரியவர்களே! அன்னைபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் போல் ஒருநாள்கூட நம்மால் வாழ முடியாது.!"
ஆனாலும் "நாம் ஏதோ வந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்றில்லாமல் நம்மால் முடிந்த அளவு பிறருக்கு ஏதாவது ஒரு உதவியை சேவையை செய்து விட்டு செல்வோம்."
அந்த உயர்ந்த எண்ணத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக.!" ஆமீன் ஆமீன்
(பள்ளி வாசல் உரையின் அடிப் படையில் எழுதப்பட்டது)
இன்றைய வினா
பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டாமா?
திருமறையின் எந்தப் பகுதியில் வரும் வசனத்தின் பகுதி இது ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
26 ரமளான் (09) 1446
27 032025 வியாழன்
சர்புதீன் பீ


Shireen
n fact, the basis of the idea that this Surah; or some verses of it were revealed at Madinah, is a tradition which has related from Ibn Abbas (may Allah bless him). He says that once Hadrat Hasan and Husain fell ill The Holy Prophet and some of his Companions visited them. They wished Hadrat Ali to make a vow to Allah for the recovery of the two children. Thereupon, Hadrat Ali, Hadrat Fatimah and Fiddah their maid servant, vowed a fast of three days if Allah restored the children to health. The children recovered by the grace of Allah and the three of them began to fast as avowed. As there was nothing to eat in the house, Hadrat Ali borrowed three measures (sa') of barley from somebody (according to another tradition, earned through labor). When on the first day they sat down to eat after breaking the fast, a poor man came and begged for food. They gave all their food to him, drank water and retired to bed. The next day when they again sat down to eat after breaking the fast, an orphan came and begged for something. They again gave away the whole food to him, drank water and went to bed. On the third day when they were just going to eat after breaking the fast, a captive came up and begged for food likewise. Again the whole food was given away to him. On the fourth day Hadrat Ali took both the children with him and went before the Holy Prophet (upon whom be peace). The Holy Prophet (on whom be peace) seeing the weak condition of the three, returned with them to the house of Hadrat Fatimah and found her lying in a corner half dead with hunger. This moved him visibly. In the meantime the Angel Gabriel (peace be on him) came and said; "Look, Allah has congratulated you on the virtues of the people of your house!"When the Holy Prophet asked what it was, he recited this whole Surah in response. (According to Ibn Mahran's tradition, he recited it from verse 5 till the end. But the tradition which Ibn Marduyah has related from Ibn Abbas only says that the verse Wa yut'imun-at ta'am... was sent down concerning Hadrat Ali and Hadrat Fatimah; there is no mention of this story in it). This whole story has been narrated by Ali bin Ahmad al-Wahidi in his Commentary of the Qur'an, entitled Al'Basit, and probably from the same it has been taken by Zamakhshari, Razi, Nisaburi and others. In the first place, this tradition is very weak as regards its chain of transmission. Then, from the point of view of its subject matter also, it is strange that when a poor man, or an orphan, or a captive, comes to beg for food, he is given all the food. He could be given one member's food and the five of them could share the rest of it among themselves:Then this also is incredible that illustrious persons like Hadrat Ali and Hadrat Fatimah, who possessed perfect knowledge of Islam, should have regarded it as an act of virtue to keep the two children, who had just recovered their health and were still weak, hungry for three consecutive days. Moreover, in respect of the captives also, it has never been a practice under the Islamic government that they should be left to beg for food for themselves. For if they were prisoners of the government, the government itself was responsible to arrange food and clothing for them, and if they were in an individual's custody, he was made responsible to feed and clothe them. Therefore, it was not possible that in Madinah a captive should have gone about begging food from door to door. However, overlooking the weaknesses of transmission and the probability of subject matter, even if the narrative is accepted as it goes, at the most what it shows is that when the people of the Holy Prophet's house acted righteously as they did, Gabriel came and gave him the good news that Allah had much appreciated their act of virtue, for they had acted precisely in the righteous way that Allah had commanded in these verses of Surah Ad-Dah

Tuesday, 25 March 2025

ரமளான் பதிவு 25 சுரா 67 முல் க் (ஆட்சி) 26 032025 புதன்





 ரமளான் பதிவு 25

சுரா 67 முல் க் (ஆட்சி)
26 032025 புதன்
உங்களை சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்
என்ற கருத்து
எந்த திரு மறை வசனத்தில் வருகிறது ?
விடை
சூ ரா 67 மூல்க் வசனம் :2
67:2. உங்களில் எவர் செயலால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க மன்னிப்பவன்.
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
சிராஜூதீன் முதல் சரியான விடை
,மெ க கராஜ்
ஷர் ம தா &
ஷிரீன் பாரூக்
இந்த வசனம் நமக்கு சொல்லும் செய்திகள்
பிறப்பு இறப்பு -இறைவன் அதிகாரம் ,உரிமை
இறைவன் வாழ்நாளைக் கொடுத்தது ஒரு சோதனைக்கே
இந்த சோதனைக்காக இறைவன் மனிதனுக்கு செயல்பட வாய்ப்பு அளிக்கிறான்
அதில் நல்லது செய்வதா இல்லை அல்லது செய்வதா என்பதை மனிதனே தெரிந்தெ டுக்கிறான்
மனிதனின் செயல் நல்லதா இல்லையா என்பதை இறைவன்தான் முடிவு செய்கிறான்
மனித வாழ்வின் மேல் முழு ஆட்சி அதிகாரம் கொண்ட இறைவன் பெரிதும் கருணையும் மன்னிக்கும் குணமும் உள்ளவன்
சூரா அல் முல்க் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் அவன து படைபபுகளின் சிறப்பையும் வலியுறுத்துகிறது,
இறைவனின் சக்தியின் அறிகுறிகளைப் பற்றி சிந்திக்க நம்பிக்கை கொண்டவரை வலியுறுத்துகிறது
தீயவர்களுக்கான நரகம் பற்றி விவரிக்கிறது
67:6. இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.
ُۙ‏
67:7. அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலையில் (கழுதையின் பெருங் குரலைப்போல்) அருவருப்பான சப்தம் அதற்கு இருப்பதை அவர்கள் கேட்பார்கள்.
67:8. அது கோபத்தால் வெடித்துவிடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், "அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?" என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.
67:9. அதற்கவர்கள் கூறுவார்கள்: "ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார். ஆனால், நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை' என்று சொன்னோம்."
அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வசனங்கள்
67:16. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் புதையச் செய்துவிடுவான் என்பதைப் பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது அது (பூமி) நடுங்கும்.
67:17. அல்லது, வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மழையை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
இறைவனின் மாட்சிமை பற்றி
67:19. இறக்கைகளை விரித்துக்கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்குமேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக்கொண்டிருக்கவில்லை; நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
பதிருப்போரில் வெறும் 300 இஸ்லாமிய வீரர்கள் தகுந்த ஆயுதங்கள் குதிரைகளஒட்டகங்கள் எதுவும் இல்லாமல் 1000 பேர் கொண்ட வலுவான எதிரிப்படையை வீழ்தியாது இறைவன் அரு ளால் மட்டுமே
போர் நடந்தது புனித ரமளான் மாத்அதில்
67:20. அன்றியும், அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எவர் உங்களுக்குப் படைத்துணையாக இருந்து, உதவி செய்வார்? நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை
மீண்டும் ஒரு அச்சமூட்டும் ம் வசனத்துடன் சூ ரா நிறைவு பெறுகிறது
67:30. (நபியே!) நீர் கூறும்: "உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதைக் கவனித்தீர்களா? (என்று எனக்கு அறிவியுங்கள்)
இன்றைய வினா
அல்லாஹ்வின் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்ட கைதிக்கும் உணவளிப்பார்கள்.
அல்குர்ஆன் (76:8)
இந்த சிறிய வசனத்தின் பின்னணியாக ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வு இருக்கிறது
(பள்ளிவாசலில் உரையில் காதில் விழுந்தது )
அது என்ன ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை கு சிந்திப்போம்
நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
25 ரமளான் (09) 1446
26 032025 புதன்
சர்புதீன் பீ

Monday, 24 March 2025

ரமளான் பதிவு 24 சுரா 62 ஜூமுஆ 25 032025 செவ்வாய

 



ரமளான் பதிவு 24

சுரா 62 ஜூமுஆ
25 032025 செவ்வாய
-மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் இறைவனுக்குப் பிமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்."
எந்த திரு மறை வசனத்தின் பகுதி இது ?
சூ ரா 62: ஜூமுஆ வசனம் 6
(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்62:6
(இதே கருத்து சூரா:-2சூரத்துல் பக்ரா(பசு மாடு) வசனம்:-94 லிலும் வருகிறது)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஷர் ம தா முதல் சரியான விடை&
சிராஜூதீன்
தொடர்ந்து அடுதக வசனம்
62:7ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்
என்று உண்மையை உரைக்கிறது "
62:8
நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும், ----------
மேலும் வேதம் அருளப்பெ ற்றும் அதைப் பின் பற்றாதவர்களை இறைவன் பொதி சுமக்கும் கழுதையோடு ஒப்பிடுகிறான்
62:5
எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும், எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
வசனம் 9,10
வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகை (ஜுமுஆ) விதிகளை சொல்கிறது
62:9
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் ----------
62:10
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
நிறைவு வசனம் பற்றி ஒரு செய்தி
வெள்ளிக்கிழமை தொழுகைக்கா மக்கள் கூடியிருக்கிறார்கள் . நபி ஸல் அவர்கள் உரை யாற்றிக்கொண்டிருக்கும்போது
ஒரு வணிக்கக்கூட்டம் பலத்த தாரை தப்பட்டை ஒலியுடன் வருகிறது
அதைக்கேட்டதும் தொ ழுகைக்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் கலைந்து வேடிக்கை பார்க்கவும் வணிகப் பொருட்களை வாங்கவும் சென்று விடுகிறது
12 பேர் மட்டுமே எஞ்சி யிரு நதார்கள்
அதையொட்டியே இந்த வசனம் அருளபெற்றதாம்
62:11
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர்.
மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்
, மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
62:1
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன், யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
இன்றைய வினா
உங்களை சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்
என்ற கருத்து
எந்த திரு மறை வசனத்தில் வருகிறது ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
24 ரமளான் (09) 1446 ==
25 032025 செவ்வாய்
சரபுதீன் பீ

Sunday, 23 March 2025

ரமளான் பதிவு 23 • சுரா 73 முஜ்ஜம்மில் • 24 032025 கிங்கள்

 




ரமளான் பதிவு 23

• சுரா 73 முஜ்ஜம்மில்
24 032025 கிங்கள்
• இரவையும் பகலையும்நீங்கள் ( மனிதர்கள் ) சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள்
• என்ற கருத்துள்ள திருமறை வசனம் எது ?
• விடை
• சுரா 73 முஜ்ஜம்மில் வசனம் 20
• சரியான விடை எழுதிய சகோ
• ஷர் ம தா வுக்கு
• வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
20 வசனங்கள் கொண்ட இந்த சூரா வின் முதல் வசனத்தில் வரும்
போர்வை போர்த்தியவர்
என்ற சொல் பெயராக அமைகிறது
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவே, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்,
அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான், அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்.
ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்.
(ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்,
ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்
; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்;
இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்;
அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்,
நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.(73:20)
முதல் 19 வசனங்கள் சிறிது சிறி தாய் இருக்கின்றன
வசனம் 20 மிக நீள மாக ஒரு பாரா அ;ளவுக்கு இருக்கிறது
அந்த வகை யில் ஒரே வசனத்தில் அமைந்த ருக்கு எனும் சிறப்பைப் பெறுகிறது
தஹஜஜத எனும் இரவு சிறப்புத் தொழுகை பற்றி சற்று விரிவாக சொல்கிறது இந்த சூரா
இரவு முழுதும் தொழுக வேண்டும் என்பது போல சொல்லும் 19 வசனங்களில் இருந்து மாறுபட்டு எளிதாகத் தொழ சொல்கிறது வசனம் 20
ஜக்காத் , சதக்கா இறைவனுக்குக் கொடுக்கும்
அழகிய கடன் என்று சொல்லப்படுகிறது
சில வசனங்கள்
-73:4 --------குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் 7ஓதுவீராக
73:6நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.
73:8------(இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.
73:4அந்நாளில்(தீர்ப்பு நாளில் ) பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும்.
73:17எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
73:18
அதில் வானம் பிளந்து விடும் அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்
• இன்றைய வினா
-----------மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் இறைவனுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்."
எந்த திரு மறை வசனத்தின் பகுதி இது ?
• இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
• நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
• 23 ரமளான் (09) 1446
• 24032025 திங்கள்
• சரபுதீன் பீ